

சென்னை
தெலங்கானா மாநில ஆளு நராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள் ளார். அவர் வரும் 8-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இதையொட்டி, பாஜகவி னர் மட்டுமல்லாமல் பல் வேறு கட்சிகள், அமைப்பு களைச் சேர்ந்தவர்களும் அவருக்கு நேரிலும்,, கடிதம் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின் றனர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழி சையின் இல்லத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று காலை 9 மணி அளவில் சென்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜனும் உடன் இருந்தார்.
இதுதொடர்பாக நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாசன், ‘‘மக்கள் பணி, இயக்கப் பணி என்று இரண்டுக்கும் சமமாக முக்கி யத்துவம் கொடுத்து மிகப் பெரிய அளவில் பணியாற்றி வருபவர் தமிழிசை சவுந்தர ராஜன். அவர் சார்ந்த இயக் கம் வளர கடினமாக உழைப்ப வர்.
அவர் சார்ந்த கட்சி ஆட்சி யில் இருக்கும் நிலையில், நகரம் முதல் கிராமம் வரை மக்களுக்கு பல நல்ல திட் டங்கள் சென்றடைய, தொடர்ந்து பணியாற்றி வரு கிறார். அவரது கடின உழைப் புக்கு பலன் கிடைத்துள்ளது. தெலங்கானா ஆளுநராக பதவி யேற்க உள்ள அவருக்கு வாழ்த் துகள்’’ என்று தெரிவித்துள் ளார்.