

டி.செல்வகுமார்
சென்னை
சென்னை மாநகரில் வீடுகள், குடியிருப்பு கள் கட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதன் முன்பகுதியில் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், சிறிய மருத்துவமனைகள், ஏடிஎம் மையங்கள், மகளிர் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை நடத்தப் படுகின்றன. அவற்றுக்கு வணிகக் கட்டணம் வசூலிக்கப்படாததால் சென்னை மாநகராட் சிக்கு குறைந்தபட்சம் ரூ.100 கோடி வரு வாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வீடுகள், குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, விதிகளை மீறி கூடுதல் வீடுகள் கட்டப்பட்டன. அதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின்பேரில் விதிமீறல் கட்டிடங்களை முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
அதேநேரத்தில் வீடு அல்லது குடியி ருப்புகள் கட்டுவதற்கு சென்னை மாநக ராட்சி அல்லது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) அனுமதி வாங்கிவிட்டு, அதன்படி வீடு அல்லது குடியிருப்புகள் கட்டுகிறார்கள்.
பின்னர் சிறிதுகாலம் கழித்து, அந்த வீட்டின் முன்பகுதியில் ஏடிஎம் மையம், பலசரக்கு கடை, மருந்தகம், சிறிய மருத் துவமனை, மகளிர் விடுதி, ஆண்கள் விடுதி, ஓட்டல், வாட்டர் கேன் தயாரிப்பு தொழிற்சாலை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட வற்றை அமைக்க இடம் ஒதுக்கிக் கொடுத்து வாடகை பெறுகின்றனர்.
சென்னையில் பெரும்பாலான வீடுகள், குடியிருப்புகள் இவ்வாறு சட்டவிரோதமாக வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்து வது தெரியவந்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஓ.உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, வீட்டின் ஒரு பகுதியை வணிக நோக்கத்துக்குப் பயன் படுத்துவதை எங்கும் காண முடிகிறது. திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளபடி வீடு மட்டும்தான் கட்டி குடியிருக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை கடைகள், ஓட்டல்கள், மருந்தகங்கள், பெட்டிக் கடை, டீ கடை, புரோட்டா கடை, பானிபூரி கடை உள்ளிட்டவை அமைக்க இடம் ஒதுக்கிக் கொடுத்து கணி சமாக வாடகை பெறுகின்றனர். ஆனால், வணிக நோக்கத்துக்காக வீட்டின் ஒரு பகுதி யைப் பயன்படுத்துவதற்கு முறையாக அவர்கள் அனுமதி பெறுவதில்லை.
அவ்வாறு அனுமதி பெற்றால், வணிக நோக்கத்துக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்த நேரிடும். சென்னை மாநகராட்சி அதிகாரி களும் இந்த சட்டவிரோத பயன்பாட்டைக் கண்டுகொள்வதில்லை.
உதாரணத்துக்கு வீடுகளில் விடுதி கள் நடத்தக் கூடாது என்று சட்டம் சொல் கிறது. ஆனால், வீடுகளில் விடுதிகள் நடத்து வதுடன், வீட்டு உபயோகத்துக்கான குடி நீரை வணிக நோக்கில் கூடுதலாக பயன் படுத்துகின்றனர். மின்திருட்டும் நடக்கிறது. வீடுகள் அல்லது குடியிருப்புகளில் நடத்தப்படும் மகளிர் விடுதிகளுக்கு அரசு அதிகாரிகள் சுகாதாரச் சான்று வழங்கி யுள்ளனர். சட்டவிரோதமாக நடத்தப்படும் விடுதிகளுக்கு எவ்வாறு சுகாதாரச் சான்று வழங்க முடியும்?
தற்போது சொத்து வரி உயர்த்தப்பட் டுள்ள நிலையில், சென்னையில் வீடுகள், குடியிருப்புகளில் சட்டவிரோதமாகச் செயல் படும் கடைகள் உள்ளிட்டவற்றை வணிகப் பயன்பாட்டின் கீழ் கொண்டு வந்தால், கோடிக் கணக்கான வருவாய் இழப்பை தவிர்க் கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக தொழில்முறை நகர மைப்பு வல்லுநர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த் கூறும்போது, “வீடு கட்டுவதற்காக பெறப்பட்ட திட்ட அனுமதி யில் உள்ளபடி வீடு கட்டி குடியிருக்கலாம். அதைவிடுத்து வீட்டை ‘ஆல்டர்’ செய்து, கடை, ஏடிஎம் மையம் உள்ளிட்டவை அமைத் தால் அது சட்டவிரோதமாகும். அதுபோல சென்னையில் 80 சதவீத வணிக நிறுவ னங்கள் சட்டவிரோதமாக வீடுகள், குடியிருப் புகளில் செயல்படுகின்றன.
இந்த வணிக நிறுவனங்கள் அமைந் துள்ள இடத்துக்கு தற்போதைய வழிகாட்டி மதிப்பின்படி வணிகக் கட்டணமாக சொத்து வரி மற்றும் குடிநீர், மின்சாரக் கட்டணம் வசூலித்தால் குறைந்தபட்சம் ரூ.100 கோடி கிடைக்கும்’’ என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கள் கூறும்போது, “பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்காக வீடுகள், கடைகளில் ஆய்வு நடத்தியபோது, பெரும்பாலான கடைகள், வீடுகளின் முன்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
எனவே, அந்த வீடுகள், குடியிருப்புகளை சட்டப்படி முறைப்படுத்தும் பணியை, மக்க ளவைத் தேர்தலுக்குப் பிறகு தொடங்கத் திட்டமிடப்பட்டது. இருப்பினும் இதுவரை அப்பணி தொடங்கப்படவில்லை’’ என்ற னர்.