Published : 06 Sep 2019 08:08 AM
Last Updated : 06 Sep 2019 08:08 AM

தமிழகத்துக்கு வலசை வர தொடங்கிய ‘வெளிநாட்டு விருந்தாளி’; மதுரையில் முதன்முறையாக தென்பட்ட ‘ஐரோப்பா கரும் நாரை’

முதன்முறையாக மதுரைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட கரும் நாரை.

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

தமிழகத்துக்கு வெளிநாட்டு விருந் தாளியாக வெளிநாட்டுப் பறவை கள் வலசை வரத்தொடங்கி உள்ளன. இதில், மதுரையில் முதன்முறையாக ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட கரும் நாரை பறவை தென்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பறவை கள் வலசைக் காலம் செப்டம்பரில் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும். உலகெங்கும் வடபகுதிகளில் கடும் குளிர்காலம் தொடங்கியதன் அறிகுறியாக தற்போது வெளி நாட்டுப் பறவைகள் தமிழகத்துக்கு வலசை வரத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக இந்தப் பறவைகள் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு அதிகம் வலசை வருகின்றன. எப்போதுமே இந்தப் பறவைகள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு அதிக அளவு வரும்.

மதுரை மாவட்டத்துக்கு இந்த ஆண்டு மிக அரிதாக மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட கரும் நாரை (Black Stork) எனும் பறவை ஒன்று வலசை வந்துள்ளது. முதன் முதலாக இந்தப் பறவை, மதுரை நீர்நிலைகள், வனப்பகுதிகளில் தென்பட்டது.

இப்பறவையை மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாண வர்கள் கிஷோர்குமார், கணபதி இருவரும் சோழவந்தான் வனப் பகுதி அருகே உள்ள நீர்த்தேக் கத்தில் கண்டறிந்தனர். பின்னர் இதை மதுரையின் பறவை ஆர்வ லர்கள் சாம்சன், தணிகைவேல், ரவீந்திரன் ஆகியோரும் உறுதி செய்தனர்.

இனப்பெருக்கம் செய்ய...

சோழவந்தான் வனப்பகுதியில் கரும் நாரையை புகைப்படம் எடுத்த பறவை ஆர்வலர் ரவீந் திரன் கூறியதாவது:

கரும் நாரைகள், செங்கால் நாரையின் தூரத்து உறவே. இவை பெரும்பாலும் மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய தேசங் களில் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதிகளை அடுத்த நீர்நிலை களைச் சார்ந்து வாழும் இவைகள், உயர்ந்த மரங்களிலும் சிலவேளை மலைகளில் உள்ள பாறைகளின் ஊடே கூடு கட்டி வாழ்கின்றன.

குளங்களில் உள்ள மீன்களை யும், புல்வெளிகளில் உள்ள வெட் டுக்கிளி போன்ற பூச்சி இனங் களையும் உணவாக உட்கொள் ளும் இப்பறவைகள், குளிர்காலம் தொடங்கும் பொழுது பெரும் பாலான ஐரோப்பியப் பகுதியை விட்டு ஆப்பிரிக்க தேசங்களுக்கு வலசை சென்று விடுகின்றன. கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசி யாவைச் சேர்ந்த கரும் நாரைகள் மட்டுமே இந்தியாவுக்கு வலசை வருகின்றன.

ஆண்டுக்கு ஆண்டு குறைவு

கடந்த பத்தாண்டுகளில் இந்த வகை கரும் நாரைகளின் வரவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருவது சூழலியல் ஆர்வலர்களையும், பறவை ஆர்வலர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. இதற்கு இந்தியப் பகுதிகளில் இப்போது பரவலாக மாறி வரும் தட்பவெப்ப நிலையும், நீர் நிலைகள் வறண்டு போவதும்கூட காரணமாக இருக்க லாம்.

மேலும் இப்போது நீர் பரப்பு கள் பலவும் மனிதர்களால் ஆக்கி ரமிக்கப்படுவதால் இதுபோன்ற பறவைகள் அவ்விடத்தில் வாழ விரும்புவது இல்லை. இத்தகைய சூழலில் தற்போது வலசைக் காலம் தொடங்கியவுடன் ஒரு அரிய பறவையை மதுரை மாவட்டத்தில் கண்ட மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x