செய்திப்பிரிவு

Published : 06 Sep 2019 08:04 am

Updated : : 06 Sep 2019 08:04 am

 

தொடரும் தங்கம் விலை உயர்வால் தீபாவளிக்கு புதிய நகைகள் வாங்க வியாபாரிகள் தயக்கம்: விற்பனை 30 சதவீதம் குறைந்ததாக தகவல்

gold-price-hike

சென்னை

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தீபாவளிக்கு புதிய நகைகள் வாங்க வியாபாரிகள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு மாதத்துக்கு முன்பே புதிய டிசைன் நகைகள் மற்றும் கூடுதலாக நகைகளை வாங்க, நகை உற் பத்தியாளர்களிடம் வியாபாரிகள் ஆர்டர் அளித்து விடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.

இதனால், கடந்த ஒரு மாத மாக நகை விற்பனை மந்தமாக உள்ளது. இதேபோல், ஏற் கெனவே, உற்பத்தியான நகை களும் விற்பனையாகாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நகை உற்பத்தி தொழிலாளர்கள் மத்தியிலும் கவலை ஏற்பட்டுள் ளது.

ஒரு மாதத்துக்கு முன்பே...

இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘ஆண்டுதோறும் தீபாவளி பண் டிகை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே புதிய, நகைளுக்கும், பாரம்பரிய நகைகளுக்கும் நகை உற்பத்தி, வடிமைப்பாளர்களிடம் ஆர்டர்களைக் கொடுத்துவிடு வோம். ஆண்டுதோறும் 500-க் கும் மேற்பட்ட புதிய நகைகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும்.

குறிப்பாக சோலாப்பூர் நெக்லஸ், கேரளா ஆரம், செயின், வளையல்கள், மூக்குத்தி, கம்மல், மோதிரம் ஆகியவை நூற்றுக்கணக்கான டிசைன்களில் தயாரித்து வைத்திருப்போம். ஆனால், இந்த ஆண்டு எப் போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து விட்டது.

ரூ.30 ஆயிரத்தை தாண்டியது

22 கேரட் கொண்ட ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியுள் ளது. இதனால், பொதுமக்கள் நகை வாங்குவதும் கணிசமாகக் குறைந்துள்ளது. விற்பனையும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், புதியதாக ஆர்டர் கள் கொடுப்பதில் நகை வியாபாரி களுக்கு தயக்கம் ஏற்பட்டுள் ளது.

இருப்பினும், மத்திய அரசு எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு மீண்டும் தங்கம் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

தங்கம் விலைதங்கம் விலை உயர்வுபுதிய நகைகள்வியாபாரிகள் தயக்கம்விற்பனை குறைவுதீபாவளி பண்டிகைசோலாப்பூர் நெக்லஸ்கேரளா ஆரம்செயின்வளையல்கள்மூக்குத்திகம்மல்மோதிரம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author