

சென்னை
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணியில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:
புகைப்பட வாக்காளர் பட்டிய லில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் புதிய நடைமுறையை உருவாக்கி உள்ளது. கடந்த 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்காலகட்டத்தில் வழங்கப்படும் திருத்தங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டு, அக்.15-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் உதவி தொலைபேசி எண்.1950, கைபேசி செயலி, தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (National Voter’s Service Portal), பொது சேவை மையங்கள், வாக் காளர் உதவி மையங்கள், அரசு கேபிள் டிவி இ-சேவை மையங் கள், வாக்காளர் உதவி மையங்கள் ஆகியவற்றின் மூலம் வாக்காளர் கள் தங்கள் விவரங்களை திருத்தம் செய்வதற்கும், சரிபார்ப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் கட்சி நிர்வாகி கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர் கள் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிர்வாகிகள், கூட்டுறவு அமைப்பு களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதி நிதிகள் தனிக் கவனம் செலுத்தி வாக்காளர் சரிபார்த்தல் பணிக ளில் ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள் ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது சம்பந்தமாக கட்சி நிர்வாகி கள் அனைவரும் தாங்கள் மேற் கொண்ட பணிகள் குறித்த விவரங் களை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மூலம் தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.