

ஈரோடு
காவிரி ஆற்றின் குறுக்கே ஈரோடு மாவட்டம் ஊராட்சிக் கோட்டையில் அமைந்துள்ள கட்டளைக் கதவ ணையின் ஷட்டர் நேற்று அதி காலை உடைந்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர், செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கால்மேடு, ஊராட்சிக் கோட்டை, சமயசங்கிலி, வெண்டி பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கதவணைகளைத் தாண்டி டெல்டா மாவட்டங்களுக்கு செல் கிறது.
இந்த கட்டளைக் கதவணை களில் தலா 1.5 டிஎம்சி வரை நீர் தேக்கப்பட்டு, தலா 30 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்ட பாசனத்துக் காக தற்போது மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17-வது ஷட்டர் உடைந்தது
காவிரி ஆற்றில் ஊராட்சிக் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கட்டளைக் கதவணை 30 அடி உயரமும், 18 ஷட்டர்களை கொண்டதாகும். இந்த கதவணை யில் 1.5 டிஎம்சி நீர் தேக்கப்பட்டு, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இக் கதவணையின் 17-வது ஷட்டர் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென உடைந்து, ஆற்று வெள்ளத்தில் 50 அடி தூரம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், இந்த வழியாக வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.
மீனவர்களுக்கு பாதிப்பில்லை
கடந்த சில நாட்களாக காவிரியில் அதிக நீர் திறக்கப்படுவதால், மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், கதவணை ஷட்டர் உடைந்து, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், மீனவர்கள் யாரும் பாதிப்படைய வில்லை. அதே நேரத்தில் ஷட்டர் உடைப்பு குறித்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.
சமய சங்கிலி மற்றும் வெண்டி பாளையம் தடுப்பணைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கு நீர் வெளியேற்றும் அளவில் உரிய மாற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து கட்டளைக் கதவணை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய அலுவலர் கள் கூறியதாவது:
மின்உற்பத்தி பாதிப்பு
ஊராட்சிக் கோட்டை கதவணை பராமரிப்புப் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது காவிரியில் 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்திக்கான பாதையில் ஆகாயத் தாமரைகளால், நீரின் வேகம் தடைபட்டு அழுத்தம் அதிகரித்ததால், 17-வது ஷட்டர் உடைபட்டுள்ளது. இதனால் மின் சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாற்று ஷட்டர் பொருத்தும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என்றனர்.