Published : 05 Sep 2019 08:29 AM
Last Updated : 05 Sep 2019 08:29 AM

இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - ஆசிரியர் தினம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்: ஒவ்வொரு ஆண்டும் முன் னாள் குடியரசுத் தலைவரும், கல்வி யாளரும், தத்துவ ஞானியுமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண் டாடப்படுகிறது. மாணவர்களுக்கு உண்மையான பாடநூல் ஆசிரியர் தான் என மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். அவர்களின் கடும் உழைப்பை அங்கீகரிக் கவே ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்நன்னாளில் தமிழக ஆசிரியர்களின் உன்னத முயற்சி கள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி: அரசு செயல்படுத்தும் எண்ணற்ற திட்டங் களைச் செம்மையான முறையில் பயன்படுத்தி, சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்க ஒன்றாகும். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்வுக்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: அறிவிலும், ஆற்றலிலும் சிறப்பு மிக்க ஒரு இளைய தலை முறையை உருவாக்கும் மிக உயர்ந்த உன்னதமான பணியில் இருப்பவர்கள் ஆசிரியர்கள் என் பதை திமுக என்றைக்கும் உணர்ந் திருக்கிறது. தாய், தந்தைக்கு அடுத்து 3-வதாக முக்கிய இடத்தில் வைத்து உலகம் போற்றும் ஆசிரியர் சமுதாயத்தின் முன்னேற்றத் துக்காக ஆட்சிப் பொறுப்பிலிருந்த நேரங்களில் எல்லாம் பல முனைகளிலும் பாடுபட்ட திமுகவின் சார்பில் தமிழக ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதில்லை. ஒழுக்கம், பண்பு, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு இளமை பருவத் தில் போதிப்பதன் மூலம் எதிர்கால இந்தியாவில் அறிவுத் திறன் மிக்கவர்களாக விளங்குவதற்கு ஆசிரியர்கள் பெரும் துணையாக இருக்கிறார்கள். எனவே, இத் தருணத்தில் ஆசிரியப் பெருமக்க ளுக்கு மனப்பூர்வமான வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாகத் திகழும் ஆசிரியர்கள் தினத்தை கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜய காந்த்: முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகி யோரை முன்மாதிரியாக கொண்டு ஆசிரியர்கள் தங்கள் பணியை பொதுநல சிந்தனையோடு சிறப்பாக செய்ய வேண்டும்.

அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன்: ஆசிரியர் பணி என்பது வெறுமனே எழுத, படிக்கக் கற்றுத் தருவது மட்டு மல்ல. சிறந்த மனிதனுக்கு தேவையான குணங்களை மாண வர்கள் மனதில் விதைத்து வளர்த் தெடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு வாழ்த்துகள்.

சமக தலைவர் சரத்குமார்: சமூகத்துக்கு சிறந்த மனிதர்களை உருவாக்கி அனுப்பும் தலையாய பொறுப்பேற்று மாணவர்களின் வாழ்வு சிறக்க தன்னலமின்றி அன்றாடம் உழைக்கும் ஆசிரியர் களுக்கு எனது நல்வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: எல்லோரும் நல்வாழ்க்கை வாழ ஒளி விளக்கேற்றியவர்கள் ஆசிரியர்கள். சிறந்த மனிதர்களை உருவாக்க கற்பித்தல் தொழிலை நேசித்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x