மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்கு சந்திரயான் மாற்றம்: செப்.7-ம் தேதி நிலவில் தரையிறங்குகிறது

மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்கு சந்திரயான் மாற்றம்: செப்.7-ம் தேதி நிலவில் தரையிறங்குகிறது
Updated on
1 min read

சென்னை

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் பாகம், நிலவுக்கு நெருக்கமான சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (செப்.7) நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்க உள்ளது.

கடந்த ஜூலை 22-ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவிய சந்திரயான்-2 விண்கலம், தற்போது நிலவை ஒட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வருகிறது. செப்டம்பர் 2-ம் தேதி சந்திரயான் விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதியில் இருந்து லேண்டர் பாகம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதன்பின் ஆர்பிட்டர், லேண்டர் ஆகிய விண்கலன்கள் தங்கள் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை தனித்தனியே சுற்றிவந்தன.

இதையடுத்து லேண்டரின் சுற்றுப்பாதை உயரத்தை குறைத்து அதை நிலவில் தரையிறக்கு வதற்கான பணிகள் முடுக்கிவிடப் பட்டன. முதல்கட்டமாக திரவ வாயு இயந்திர இயக்கத்தின் மூலம் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 109 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது. நேற்று அதிகாலை 3.42 மணிக்கு திரவ வாயு இயந்திரம் 10 விநாடிகள் இயக்கப்பட்டு லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்க மாக குறைந்தபட்சம் 35 கி.மீ. அதிகபட்சம் 101 கி.மீ தொலைவு கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் இப்போது கொண்டுவரப் பட்டுள்ளது.

மறுபுறம் ஆர்பிட்டர் குறைந்த பட்சம் 96 கி.மீ. அதிகபட்சம் 125 கி.மீ தொலைவு கொண்ட சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றி வருகிறது. லேண்டர், ஆர்பிட்டர் ஆகிய 2 விண்கலன்களும் நல்ல நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைத்து நாளை மறுநாள் (செப்.7) அதிகாலை 1.40 முதல் 1.55 மணிக் குள் நிலவின் தென்துருவத்தில் மிக மெதுவாக தரையிறக்கப்படும். லேண்டர் தரையிறங்கிய 3 மணி நேரத்துக்கு பின்னர் அதில் வைக்கப்பட்டுள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து ஆய்வு மேற்கொள்ளும். இன்னும் 2 நாட்களில் அரங்கேற உள்ள இந்த நிகழ்வை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in