சமையல் எரிவாயு இணைப்புகளை பரிசோதிக்க வரும் ஊழியர் விவரம்: வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் முன்கூட்டியே தெரிவிக்க ஏற்பாடு

சமையல் எரிவாயு இணைப்புகளை பரிசோதிக்க வரும் ஊழியர் விவரம்: வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் முன்கூட்டியே தெரிவிக்க ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை

வீடுகளில் சமையல் எரிவாயு இணைப்புகளை பரிசோதிக்க வரும் ஊழியர்கள் பற்றிய விவரங்கள், வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம் எஸ் மூலம் முன்கூட்டியே தெரிவிக் கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் ஆயில், இந்துஸ் தான் பெட்ரோலியம், பாரத் பெட் ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகம் முழுவதும் 2.50 கோடி வீட்டு சமையல் எரிவாயு சிலிண் டர்களை பயன்படுத்தும் வாடிக் கையாளர்கள் உள்ளனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர், காஸ் அடுப்பு, எரிவாயு ரப்பர் குழாய் இணைப்பு, ரெகுலேட்டர் ஆகியவை சரியாக உள்ளதா என 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரி சோதிக்கப்படுகிறது. அவ்வாறு பரிசோதிக்கும்போது, ஏதேனும் பழுதுகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் அவற்றை மாற்ற கட் டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தப் பரிசோதனை செய்யும் பணிக்காக எண்ணெய் நிறுவனங் கள், வாடிக்கையாளர்களின் வீடு களுக்கு ஊழியர்களை அனுப்பு கின்றன. ஆனால், சமூக விரோதிகள் சிலர் சிலிண்டர்களை பரிசோதனை செய்ய வந்துள்ளதாகக் கூறி, கொள்ளை சம்பவங்களில் ஈடு படுகின்றனர்.

இதுதொடர்பாக, வாடிக்கை யாளர்களிடம் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, எண் ணெய் நிறுவனங்கள் சிலிண் டர்களை பரிசோதிக்க செல்லும் ஊழியர்களின் விவரங்களை, வாடிக்கையாளர்களுக்கு குறுஞ் செய்தி மூலம் முன்கூட்டியே தெரி விக்கும் சேவையைத் தொடங்கி உள்ளன.

விபத்துகளை தடுப்பதற்காக...

இதுகுறித்து, எண்ணெய் நிறு வன அதிகாரிகள் கூறும்போது, “சிலிண்டர் விபத்துகளை தடுப் பதற்காக இப்பரிசோதனை நடத் தப்படுகிறது. இவ்வாறு அனுப்பப் படும் ஊழியர்களின் பெயரில் சில போலி நபர்கள் வாடிக்கை யாளர்களின் வீடுகளில் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடு படுவதாக வரும் புகார்களை தடுப் பதற்காக, இனி அனுப்பப்படும் ஊழியர்களின் விவரங்கள் குறித்த விவரங்கள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம் எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும். அவ்வாறு வரும் ஊழியர்களின் அடையாள அட்டையை வாடிக் கையாளர்கள் வாங்கி சரிபார்க்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in