Published : 05 Sep 2019 07:41 AM
Last Updated : 05 Sep 2019 07:41 AM

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களுக்கு மீண்டும் மறுகலந்தாய்வு இல்லை: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல்

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 300 இடங் களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழகத்தின் கீழ் 479 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின் றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு 1.67 லட் சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடப்பு ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தியது. அதன் படி, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கலந்தாய்வு முடிவில் 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பின. சுமார் 84 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பவில்லை. அதிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இதற்கிடையே கலந்தாய்வின் போது அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் இடங்கள் கிடைத் ததும் சென்றுவிட்டனர்.

இதனால் ஏற்பட்ட 300-க்கும் அதிகமான காலியிடங்களில் எந்த மாணவர்களும் சேர முடி யாமல் வீணாகும் சூழல் நீடிக் கிறது.

மேலும், பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைவு, இங்குள்ள ஆய்வகம், நூலகம் உட்பட வசதிகள் மற்ற கல்லூரிகளை விட சிறப்பாக இருக்கும். எனவே, இந்த இடங்களை வீணடிக்காமல் மறுகலந்தாய்வு மூலம் மற்ற மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்நிலையில் அண்ணா பல் கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் கலந் தாய்வு நடத்த இயலாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கு நரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் இயக்குநரக அதி காரிகள் கூறும்போது, ‘‘உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி ஜூலை 31-ம் தேதிக்குள் பொறியியல் கலந் தாய்வு நடத்தப்பட வேண்டும்.

அதன்பின், கலந்தாய்வு நடத்த விதிகளில் இடமில்லை. நீதிமன்றத்தை நாடிதான் அனுமதி பெற வேண்டும். எனினும், கலந் தாய்வு முடிவில் முக்கிய கல்லூரி களில் காலிப்பணியிடங்கள் ஏற்படுவதை சரிசெய்வதற்கான மாற்று ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x