

எஸ். முஹம்மது ராஃபி
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரையில் உலகிலேயே அதிக விஷத்தன்மையுள்ள கல் மீன் சிக்கியது. உயிருடன் வலையில் பிடிபட்ட கல் மீனை அப்பகுதி மீனவர்கள் மீண்டும் ஆழ்கடலில் விட்டனர்.
சாயல்குடி அருகே உள்ளது மூக்கையூர் மீனவக் கிராமம். திங்கட்கிழமை கிங்ஸ்டன் என்ற மீனவரின் நாட்டுப் படகில் வலையை இழுக்கும்போது, உலகிலேயே அதிக விஷம் கொண்ட கல் மீன் சிக்கியது. இந்த மீனைப் பற்றி, மரைக்காயர் பட்டி னத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச் சித் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியது:
சைனேன்சியா வெருகோசா (Synanceia verrucosa) என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இந்த மீனை கல்மீன் என்று அழைக் கின்றனர். சாம்பல், பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு வர்ணங்களில் பார்ப்ப தற்கே கரடுமுரடான தோற்றத்தில் கல்லைப் போன்று காணப்படும்.
இது இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதி யில் வசிக்கும். உலகிலேயே மிக அதிக விஷம் கொண்ட மீனாக உள்ளது. இதன் உடலில் 13 கத்தி போலிருக்கும் முட்களில் உள்ள விஷம், மனிதனைத் தாக்கினால் 2 மணி நேரத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்ப டும். இதன் விஷம் மேலும் அதிகரித் தால் அதிகபட்சமாக மரணம் ஏற் படும். எனவே இந்த மீனால் தாக்கப் பட்டோர் உடனடியாக மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கடலுக்கு அடியில் பாறைகளுக் கிடையே கல்லைப்போல மறைந் திருக்கும் இந்த கல் மீன், அருகில் வரும் இரையை தனது வாயை திறந்து சட்டென விழுங்கிவிடும். கல் மீனின் ஒரே எதிரி சுறா மீன் கள்தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீனவர்கள் வலையில் அரி தாகவே சிக்கும் கல் மீன் பிடி பட்டால், அதிக மீன்பாடு கிடைக் கும் என்பது நம்பிக்கை. இதனால் மூக்கையூரில் பிடிபட்ட கல் மீனை கடலிலேயே மீனவர்கள் திரும்ப விட்டுவிட்டனர்.உடலில் கத்திகள்போல் இருக்கும் 13 முட்களில் உள்ள விஷம், மனிதனை தாக்கினால் 2 மணி நேரத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படும். விஷம் மேலும் அதிகரித்தால் அதிகபட்சமாக மரணம் ஏற்படும்.