

திருப்பூர்
கட்சியின் வழிமுறைகள்படி தலை வர் அறிவிப்பு வரும் என்று பாஜக மாநில செயலாளர் வானதி சீனி வாசன் தெரிவித்தார்.
திருப்பூரில் செய்தியாளர்களி டம் நேற்று அவர் கூறியதாவது: பாஜகவின் அமைப்பு தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் இம்மாத இறுதிவரை நடைபெறுகிறது. மாவட்டம் மற்றும் மாநிலத்துக்கு என கட்சித் தேர்தலுக்கு நியமிக்கப் பட்டுள்ள அலுவலர்கள் தேர்தலை நடத்துவார்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்க ளிலும் சிறப்பு அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, பல்வேறு விதமான சேவைகள் செய்யும் விதமாக, சேவை வாரமாக கொண்டாட உள்ளோம். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை யான உதவிகளை செய்ய உள் ளோம்.
அக். 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து பாத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம்.
பாஜகவை பொறுத்தவரை தலைவர் பதவி என்பது, தங்க ளுக்கு அளிக்கப்படும் பொறுப்பு தான். அதனை கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். கட்சியில் அதற்கென்று வழிமுறைகள் உள் ளன. அதன்படி, தலைவர் அறிவிப்பு வரும் என்றார்.
கருப்பு முருகானந்தம்
திருவாரூரில் நேற்று செய்தி யாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், “தமிழக பாஜக தலைவராக ரஜினியை அறிவிப்பது குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். இவர்தான் பாஜக தலைவர் என்று தலைமை அறிவித்தால், அவரது தலைமையை ஏற்றுச் செயல்பட தயாராக உள்ளோம்” என்றார்.