

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே கல்குவாரிக்கு வைத்திருந்த வெடி வெடித்ததில் அருகில் மேய்ந்து கொண்டிருந்த 37 ஆடுகள் உயிரிழந்தன. ஒருவர் மாயமானார்; 4 பேர் காயமடைந்த னர்.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் மாகரல் அருகே சித்தாலப்பாக்கம் பகுதியில் தனி யாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல் குவாரி பிரபல அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. இந்த கல்குவா ரிக்கு அருகிலேயே ஓர் அறை அமைத்து அதில்குவாரிக்கு தேவை யான வெடிபொருட்களை வைத் திருந்தனர். அதன் அருகில் ஒரு கூரைக்கொட்டகை அமைத்து அதில் பணி செய்பவர்கள் தங்கி இருந்தனர்.
இந்த கல்குவாரியில் திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் மோகன் (28) என்பவர் பணி செய்து வந்தார். இவர் வெடிகளை வெடிக்க வைப்ப தில் திறன் பெற்றவர். இவருடன் மாகரல் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (59), ஆற்பாக்கம் பகுதி யைச் சேர்ந்த வினோத் (22), சித் தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயன் (45) உள்ளிட்டோரும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கல்குவாரியில் வெடி வைப்பதற்காக மோகன் அங் குள்ள அறையில் இருந்த ஜெலட் டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்களை எடுக்கச் சென்றார். அப்போது அவர் தொலைபேசி யில் பேசிக் கொண்டிருந்ததாக தெரி கிறது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித் தன. இந்த வெடிச்சத்தம் அருகில் உள்ள 3 ஊர்களுக்கு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்து நடை பெற்றபோது அருகில் மேய்ந்து கொண்டிருந்த சித்தாலப்பாக் கத்தைச் சேர்ந்த நடராஜன் என்ப வருக்கு சொந்தமான 35 ஆடுகளும், ஜெயராமன் என்பவரின் 2 ஆடு களும் உயிரிழந்தன. 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பல்வேறு இடங் களுக்கு சிதறி ஓடிவிட்டன.
கல்குவாரியில் பணியாற்றி வந்த விஜயன், லோகநாதன், வினோத், மணி ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்த மோட்டார் சைக் கிள் ஒன்றும் சிதறியது. 500 மீட்ட ருக்கு அப்பால் உள்ள 2 வீடுகளின் கண்ணாடிகள் இந்த வெடி விபத் தின் அதிர்வால் உடைந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மோகன் நிலை என்ன?
வெடிபொருட்களை எடுக்கச் சென்ற மோகன் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவரது சடலம் கிடைக்காததால், அவர் உடல் சிதறி இறந்திருக்கலாம் என கருதப்படு கிறது. அவரது நிலை குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.