Published : 04 Sep 2019 08:14 AM
Last Updated : 04 Sep 2019 08:14 AM

முத்ரா கடன் திட்டத்தில் வாராக் கடன் அதிகரிப்பு: கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மீண்டும் கடன் பெறுவதில் சிக்கல்

ப.முரளிதரன்

சென்னை

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக அறிமுகப்படுத் தப்பட்ட முத்ரா கடன் திட்டத்தில், கடந்த 2016-17-ம் ஆண்டில் 4.35 சதவீதமாக இருந்த வாராக் கடன் தற்போது 9.5 சதவீதமாக அதிகரித் துள்ளது. கடனைத் திருப்பி செலுத்தாதவர்கள் மேற்கொண்டு எந்த வங்கியிலும் கடன் பெற முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு முத்ரா (மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மெண்ட் அண்டு ரீபை னான்ஸ் ஏஜென்சி) என்ற கடன் திட்டத்தைத் தொடங்கியது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இக்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.

இக்கடன் திட்டம் 3 வகைகளை கொண்டது. ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் ‘சிசு’ என்றும், ரூ.5 லட்சம் வரையிலான கடன் ‘கிஷோர்’ என்றும், ரூ.10 லட்சம் வரையிலான கடன் ‘தருண்’ என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

முத்ரா கடன் திட்டத்தின்கீழ், இதுவரை ரூ.3.22 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.49,200 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. சுமார் 20 கோடி பேர் முத்ரா கடன் பெற்றுள்ளனர். ஒருபக்கம் கடன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், அதை வாங்கிய வர்கள் திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இதனால் வாராக் கடன் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

சிறு, குறு தொழில்களில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு பணம்தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது. பணம் இல்லாததால் பலர் தங்களது தொழிலை விரிவுபடுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின் றனர்.

அதேபோல், பலர் சுய தொழில் தொடங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இவ்வாறு தவிப்பவர்களுக்கு உதவும் வகை யில்தான், மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முத்ரா கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு வங்கிகளை வலியுறுத்தியதால், வங்கிகள் இக் கடனை தாராளமாக வழங்கின. இதனால், ஏராளமானோர் வந்து கடன் பெற்றனர். இவ்வாறு பெற்ற வர்களில் சிலர் முறையாக திருப்பி செலுத்தவில்லை. இதனால் வாராக் கடன் அதிகரித்து வருகிறது. கடந்த 2016-17-ம் ஆண்டில் 4.35 சத வீதமாக இருந்த வாராக் கடன் தற் போது 9.5 சதவீதமாக அதிகரித்துள் ளது.

இதில் முதலிடத்தைப் பிடித்தி ருப்பது சிசு கடன்தான். இக்கட னில் 12.40 சதவீதம் வாராக் கடனாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கிஷோர் பிரிவில் 10.20 சதவீதமும், தருண் கடன் பிரிவில் 9 சதவீதமாக வும் உள்ளது.

முத்ரா கடன் பெறுவதற்காக மோசடிக் கணக்குகளும் வங்கி களில் தொடங்கப்பட்டுள்ளன. சுமார் 2,500 மோசடிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், 15 சதவீத கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக சண்டிகரிலும், ஆந் திராவிலும் அதிக அளவு மோசடிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள் ளன.

முத்ரா கடனை வாங்க எவ்வித சொத்தையும் பிணையமாக தர வேண்டியதில்லை. இதுவும் கடன் வாங்கி திருப்பி செலுத் தாதவர்களுக்கு வசதியாக அமைந் துள்ளது. இவ்வாறு கடனை திருப்பி செலுத்தாமல் வங்கியை ஏமாற்ற லாம் என நினைத்தால், அவர் களுக்கு எதிர்காலத்தில் தங்களது தொழிலை விரிவுபடுத்த எந்த வங்கி யிலும் கடன் கிடைக்காது என் பதைப் புரிந்துக் கொள்ள வேண் டும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x