Published : 04 Sep 2019 07:55 AM
Last Updated : 04 Sep 2019 07:55 AM

ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து மாநில அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை: தமிழக பொது விநியோகத் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

புதுடெல்லி

ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து மாநில அமைச்சர்களுடன் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லியில் நேற்று ஆலோ சனை நடத்தினார்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநி யோகத் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை வழங்கும் 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' அட்டை திட்டத்தை செயல்படுத்துவதற் கான முயற்சியில் மத்திய அரசு இறங்கி யுள்ளது. பொது விநியோகத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இத்திட்டத்தை எதிர்த்தன.

ஆனாலும், ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகா ராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரி யானா, ஜார்க்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந் துள்ளன. மற்ற மாநிலங்களையும் இத்திட்டத்தில் இணைக்க மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. அதில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தத் திட்டம் தொடர்பாக டெல்லியில் நேற்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தில் அனைத்து மாநிலங்களின் உணவுத் துறை அமைச்சர்கள், உணவுத் துறை செய லாளர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு அதி காரிகளிடம் கேட்டபோது, "தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைகளும் மின் னணு குடும்ப அட்டைகளாக மாற்றப் பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ளன. எனவே, ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்று மத்திய அரசு சொல்லி வருகிறது.

ஆனால், தமிழகத்தில் பொது விநி யோகத் திட்டம் ஏற்கெனவே வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் ரேஷன் கடைகளில் இருந்து ஏதாவது ஒரு பொருளை பெற்று வரு கின்றனர். எனவே, ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தினால் தற்போதுள்ள பொதுவிநியோக முறை கடுமையாகப் பாதிக்கப்படும். தமிழகத் தின் தனித்துவம் வாய்ந்த அனை வருக்குமான பொது விநியோகத் திட்டத் துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதை டெல்லியில் நடைபெற்ற கூட்டத் தில் உணவு அமைச்சரும், அதிகாரி களும் எடுத்துரைத்தனர்.

தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்கும் என்றும் தமிழகத்துக்கு 23 ஆயிரத்து 35 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தினார்" என்றனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் கூறியதாவது:

உணவு, நுகர்வோர் பாதுகாப்பு, பொது விநியோக முறை தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் மாநில உணவு அமைச் சர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப் பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் செயல் படுத்தப்பட்டு வரும் பொது விநியோ கத் திட்டம் குறித்தும் ஆலோசிக் கப்பட்டது. ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அறி முகப்படுத்த மத்திய அரசு திட்ட மிட்டு வருகிறது. இதுதொடர் பாக பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது.

அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல் படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம் தான். ஜெயலலிதாவின் அற்புத மான திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்கும் முறை இங்கு இல்லை. தற் போது தமிழகத்தில் எப்படி ரேஷன் கடைகளில் அனைவருக்கும் பொருள் கள் வழங்கப்படுகிறதோ அந்த முறை தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

தமிழகத்தின் கருத்து

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும். ஆலோ சனைக் கூட்டத்தில் தமிழகத்தின் கருத்து களை எடுத்துக் கூறியுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தின்போது மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ் வனை சந்தித்த ஆர்.காமராஜ், தமி ழகத்துக்கு உணவுப் பொருள் ஒதுக் கீடு, பொது விநியோக முறை தொடர்பாக முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தை வழங்கினார்.

ஒடிசாவில் அமல்

இந்நிலையில் ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாநகராட்சியில் உள்ள 56 வார்டுகளிலும் ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டம் நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த மாநில உணவு விநியோக, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் ஸ்வைன் கூறும்போது, "ஒடிசாவில் சோதனை அடிப் படையில் புவனேஸ்வர் மாநகராட்சியில் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. மாநிலத் தின் இதர பகுதிகளுக்கும் இந்த திட்டம் படிப்படியாக விரிவு படுத்தப்படும்" என்று தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x