நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்
Updated on
1 min read

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று தொடங்கியது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 2,300 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களுக்கான விற்பனை நேற்று தொடங்கியது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இலவசமாகவும், பிற வகுப்பினர் ரூ.350-க்கும் வங்கி வரைவோலை எடுத்துக்கொடுத்தும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் மீனாட்சிசுந்தரம், மருத்துவக் கண்காணிப்பாளர் வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் 17-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடை பெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த பிற நாட்களில் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மதுரை மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு 50 இடங்களும், பி.பார்ம் படிப்புக்கு 66 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேனி மருத்துவக் கல்லூரி

ஆண்டிபட்டி அருகே கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி (நர்சிங்), பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி, பிஎஸ்சி (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஓடி ஆகிய படிப்புகளுக்கு 2015-16-ம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று தொடங்கியது.

இந்த விண்ணப்பங்கள் வரும் 17-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும் என்று கல்லூரி முதல்வர் கே.கதிர்காமு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in