Published : 03 Sep 2019 01:41 PM
Last Updated : 03 Sep 2019 01:41 PM

ஈஷாவின் நதிகளை மீட்போம் திட்டத்துக்கு கமல்ஹாசன் ஆதரவுக் குரல்

ஈஷா யோகா மையம் சார்பாக ஜக்கிவாசுதேவ் தொடங்கிய 'ரேலி ஃபார் ரிவர்ஸ்' (Rally for Rivers) என்ற நதிகளை மீட்கும் திட்டத்திற்கு நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈஷா மையத்தின் ரேலி ஃபார் ரிவர்ஸ் முயற்சியை சித்தாந்தம், மதம், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஆதரிக்க வேண்டும்.

இது எல்லோருக்கும் பொதுவான நன்மைக்கான திட்டம், நம் உலகைக் காக்கும் முயற்சி என்பதே இதனை நான் ஆதரிப்பதன் பின்னணியில் உள்ள பகுத்தறிவு. சத்குருவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த முயற்சி வெற்றியடையவும் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஜக்கி வாசுதேவின் நதிகள் மீட்பு இயக்கத்துடன் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர், அசாம் ஆகிய 6 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நதிகளை மீட்கும் தனது முன்னெடுப்பில் சாதி, மதம், கட்சி பாகுபாடு கடந்து அனைவரும் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும் என ஏற்கெனவே பலமுறை ஜக்கி வாசுதேவ் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

இந்நிலையில், கமல்ஹாசன் இன்று தனது ஆதரவை ட்வீட் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.

— Kamal Haasan (@ikamalhaasan) September 3, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x