

திருப்பூர்
மக்களின் முன்னேற்றத்தை தடுப் பவையாக மத்திய அரசின் திட்டங் கள் அமைந்துவிடக்கூடாது என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருப்பூரில் வரும் 15-ம் தேதி தேமுதிக சார்பில் முப்பெரும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறு வதையொட்டி, அரங்கம் அமைப் பதற்கான கால்கோள் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மகன் விஜயபிரபாகரனுடன் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம், திருப்புமுனை பொதுக்கூட்டமாக நிச்சயம் அமை யும். இந்த விழா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடை பெறவுள்ளது. வெளிநாட்டு முதலீடு களைக் கொண்டுவர, தமிழக முதல்வர் வெளிநாடு பயணம் மேற் கொண்டுள்ளார். அவரின் பயணம் வெற்றி பெற தேமுதிக சார்பில் வாழ்த்தி வழியனுப்பியதோடு, தமிழகத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமென கேட்டுக் கொண்டோம்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்புக் குரியது. இதில், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக் கையை, காஷ்மீர் மக்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு வேதனை அளிப்பதாக உள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக இருந் தாலும், அது மக்களின் முன்னேற் றத்துக்கு தடையாக அமைந்து விடக் கூடாது.இதுதொடர்பாக பிரதமரிடம் நேரடியாக சில கோரிக் கைகளை முன்வைத்துள்ளோம். ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை மறுபரி சீலனை செய்ய வேண்டும்.
தெலங்கானா மாநில ஆளு நராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற உயர் பதவிகளை பெண்கள் எட்டுவது வரவேற்புக்குரியது என்றார்.