

இ.ஜெகநாதன்
சிவகங்கை
கிராம நிர்வாக அலுவலர், இள நிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச் சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவ தும் நேற்று நடைபெற்றது. மொத் தம் 6,491 பணியிடங்களுக்கு 16 லட்சம் பேர் எழுதினர்.
வினாத்தாளில் ஒவ்வொரு கேள்வியும் ஆங்கிலம், தமிழில் கொடுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலக் கேள்வி ஒன்றில், இந்திய அரசிய லமைப்பின் எந்த விதி அடிப்படை உரிமைகளைக் குறிக்கிறது எனக் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அதே கேள்வி தமிழில், இந்திய அரசிய லமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகளைக் குறிக்கிறது எனக் கேட்கப்பட்டிருந்தது.
இந்த கேள்விக்கு வழங்கப்பட் டிருந்த 4 விடைகளில் ‘ஏ’, ‘பி’ ‘சி’ ஆகிய மூன்றிலும் அடிப் படை உரிமைகளுக்கான விதிகள் கொடுக்கப்பட்டிருந்தன. ‘டி’-ல் மட்டும் அடிப்படை கடமைகளை குறிக்கும் விதி என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. இதனால் ஆங்கிலத் தில் கேட்கப்பட்ட கேள்வி தவறாக இருந்தது.
அதேபோல் பொருத்துக ஒன் றில், ஆங்கில வினாவில் ‘டி’ பிரிவில், முதல் லோக்சபா கலைக்கப்பட்ட ஆண்டு எனக் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் வினாவில் ‘டி’ பிரிவில் குடியரசு தினம் குறித்து கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கான விடையில், முதல் லோக்சபா கலைக்கப்பட்ட ஆண்டே கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழில் கேட்கப்பட்ட கேள்வி தவறாக இருந்தது.
அரசியலமைப்பு தொடர்பான 2 கேள்விகள் தவறாக இருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்த னர். இதனால் இந்த 2 கேள்விகளுக் கும் கூடுதல் மதிப்பெண் தர தேர்வு எழுதியவர்கள் வலியுறுத்தினர்.