

உதகை
நீலகிரி மாவட்டத்தில் 70 இடங்க ளில் தண்ணீர் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத் தில் முதல்கட்டமாக பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடு காணி, தாளூர், சோலாடி, பாட்ட வயல், நம்பியார் குன்னு, கெத்தை உட்பட அனைத்து சோதனைச் சாவடிகள் முதல் உதகை வரை யிலான நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவுப் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் பெற ஏதுவாக 70 இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் பொருட்டு, சுத்திகரிக்கும் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு லிட்டர் ரூ.5
இந்த ஏடிஎம் மையங்களில் ரூ.5 செலுத்தி ஒரு லிட்டர் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையை உதகை தாவரவியல் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவும், உதகை-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லநள்ளி பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனனும் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் பி.நட்ராஜ், இயந்திர பயன்பாடு குறித்து விளக்கி பேசினார்.