

சென்னை
தெலங்கனா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார். இதனால் அடுத்த பாஜக மாநிலத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் 2014-ல் மத்திய அமைச்சரானதால் 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த அவர், தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவியை நேற்று அவர் ராஜினாமா செய்தார்.
தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து உட்கட்சி தேர்தல் நடைபெறும். இதன் தொடர்ச்சியாக வரும் டிசம்பரில் மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனாலும், தற்போது தலைவர் பதவி காலியாக உள்ளதால் புதிய தலைவரை கட்சி மேலிடம் எந்த நேரத்திலும் அறிவிக்கும் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பாஜக மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர் 3 ஆண்டு கள் அப்பதவியில் இருக்க முடி யும். தொடர்ந்து 2 முறை அதாவது 6 ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். 2012-ல் 2-வது முறையாக தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதால் 2014-ல் பதவி விலகினார். அதனால் அவர் தற்போது மீண்டும் தலைவராக முயற்சித்து வருகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக மேலிடம் முடிவு செய்தபோது பொன்.ராதாகிருஷ்ணன் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாகவும் மாநிலத் தலைவர் பதவிக்காகவே அவர் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர். ஆனால், 2 முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவ ருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக் குமா என்ற கேள்வியும் எழுந் துள்ளது.
தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர்கள் கே.டி.ராகவன், ஆர்.சீனிவாசன், மாநில செய்தித் தொடர்பாளர் கனக சபாபதி உள்ளிட்டோரும் மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் கட்சியின் மேலிடத் தலைவர்களையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் அணுகி வருகின்றனர்.
புதிய தலைவர் நியமிக்கப்பட் டாலும், டிசம்பரில் மாநிலத் தலை வருக்கான தேர்தல் நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.