

சென்னை
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ரமா னியை மேகாலயா உயர் நீதிமன் றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த விஜயா கம லேஷ் தஹில ரமானி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற் றார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு, நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள மணிக்குமாரை, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும், பல உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கவும் கொலீஜியம் பரிந் துரை செய்துள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தஹில ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற் றம் செய்யவும் பரிந்துரை செய் திருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.