இந்தியப் பொருளாதாரத்தின் சவால்களை எதிர்கொள்ள சட்டரீதியாக தயாராவது அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் அறிவுறுத்தல்

சென்னையில் நேற்று நடந்த கடன் வசூல் மற்றும் கடனுக்கு தீர்வு காண்பதில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் பங்கேற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாய அதிகாரிகள்.
சென்னையில் நேற்று நடந்த கடன் வசூல் மற்றும் கடனுக்கு தீர்வு காண்பதில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் பங்கேற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாய அதிகாரிகள்.
Updated on
2 min read

சென்னை

இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சிக்கலான சவால்களை எதிர் கொண்டு வருகிறது. அதற்கேற்ப நம்மை சட்டரீதியாக தயார்படுத்திக் கொள்வது அவசியம் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்தார்.

சென்னை லா 85 அறக்கட் டளை, இந்திய தவணை முறை கொள்முதல் சங்கங்களின் கூட்ட மைப்பு (எப்ஐஎச்பிஏ) சார்பில் ‘கடன் வசூல் மற்றும் கடனுக்கு தீர்வு காண்பதில் கடன் வசூல் தீர்ப்பாயங் கள், தேசிய நிறுவன சட்ட தீர்ப் பாயங்கள் எதிர்கொள்ளும் சவால் கள்’ என்ற தலைப்பிலான கருத் தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியதாவது:

ஒரு தொழில் என்றால் அதில் வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம் என அனைத்தும் இருக்கும். நல்ல நிலையில் இயங்கும் நிறுவனங்கள் திடீரென சரிவை சந்தித்தால், அவற்றை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர, கடன் நொடிப்பு மற்றும் திவால் சட்டங்கள் உள்ளன. நொடித்துள்ள பல நிறுவ னங்களுக்கு இதுபோன்ற சட்டங் கள் நல்ல விடிவுகாலத்தை தந் துள்ளன.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங் கள், கடன் வசூல் தீர்ப்பாயங்கள் போன்ற அமைப்புகள், திவால் நடைமுறை சட்டங்கள் ஆகியவை இல்லாவிட்டால் கட்டப்பஞ்சாயத்து பெருகிவிடும்.

சட்டங்கள் மூலம் கடிவாளம்

பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பது அவசியம். அதற்கு அரசு இயந்திரங்கள், மக்கள் பிரதிநிதிகள், மத்தியஸ்தர்கள், வழக்காடிகள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கோடிக் கணக்கில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் பெரும் முதலைகளுக்கு இதுபோன்ற சட் டங்கள் மூலம் கடிவாளம் போடப் படுகிறது.

உலகளாவிய பிரச்சினை யால் இந்தியப் பொருளாதாரமும் பல்வேறு சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆட்டோ மொபைல் உட்பட பல துறை களும் சரிவை சந்தித்து வருவதாக அன்றாடம் செய்திகள் வருகின் றன. எனவே, அதற்கேற்ப நாமும் நம்மை சட்டரீதியாக தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் சட்டரீதியிலான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று, ராமாய ணத்தில்கூட கடன் பெற்றவர்களின் நிலை வர்ணிக்கப்படுகிறது. கடன் வசூல், கடன் நொடிப்பு, திவால் நடைமுறைகளில் சட்டரீதியாக பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொள்வது என்று அறிந்துகொள் வதற்கு இதுபோன்ற கருத்தரங்கு கள் பேருதவி புரிகின்றன’’ என்றார்.

இக்கருத்தரங்கில் 10-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். கருத்தரங்கு ஏற் பாடுகளை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இ.ஓம்பிரகாஷ், பி.எச்.அரவிந்த்பாண்டியன், லா 85 அறக்கட்டளை தலைவர் வழக் கறிஞர் இளங்கோ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி நன்றி கூறினார். வழக்கறிஞர் சுபத்ரா தொகுத்து வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in