தனியார் கட்டுப்பாட்டில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்: பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என ஊழியர்கள் புகார்

தனியார் கட்டுப்பாட்டில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்: பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என ஊழியர்கள் புகார்
Updated on
1 min read

சென்னை

சென்னையில் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் உட்பட 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று முதல் தனியார் நிறுவனங் களின் கட்டுப்பாட்டில் ஒப் படைக்கப்பட்டுள்ளன. நிர் வாகத்தின் இந்த நடவடிக்கை யால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் தற்போது 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. மொத்தமுள்ள 32 ரயில் நிலையங்களிலும் டிக் கெட் அளிப்பது, பாதுகாப்பு, துப்புரவு, உள்ளிட்ட பெரும் பாலான பணிகள் தனியார் நிறுவன ஊழியர்களால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், நிலைய கட்டுப் பாட்டாளர்கள் போன்ற பணி கள் மட்டும் நிரந்தர பணியாளர் கள் மூலம் மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையே, அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சை யப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா உட்பட மொத்தம் 9 ரயில் நிலையங் களை நேற்று முதல் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக் கப்பட்டது. இருப்பினும், தற் போதுள்ள நிரந்தர பணி யாளர்கள் அவர்களது பணியை தொடர்ந்து ஆற்று வார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட் ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தின் துணை தலை வர் இளங்கோவன் கூறும் போது, ‘‘மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஒரே நிரந்தர ஊழியர்களாக நிலை கட்டுப்பாட்டாளர்கள் பணியாற்றி வந்தனர். தற் போது, இந்த பணி தனி யார் நிறுவனத்திடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. ஏற் கனவே இருக்கும் நிரந் தர ஊழியர்கள் டெல்லியில் முறையாக பயிற்சி பெற்று, ரயில்கள் இயக்கம், பாதுகாப்பு பிரிவு உட்பட அனைத்து பணிகளை மேற் கொள்ள உரிய பயிற்சியை பெற்றுள்ளனர்.

இப்போது, முறையாக பயிற்சி பெறாத ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மேலும், தமிழக இளைஞர்களின் நிரந்தர பணியை பறிக்கும் இந்த முடிவை கைவிட தமிழக அரசு நேரடியாக தலையிட வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in