

சென்னை
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் பாது காப்பு பணியில் 10 ஆயிரம் போலீ ஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், கட லோர பாதுகாப்பு குழுமத்தினரும் கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்து அமைப்புகள், தனி நபர்கள், கட்சிகள், பொது மக்கள், குடியிருப்புவாசிகள் உட் பட பல்வேறு தரப்பினரும் பொது இடங்களில் விதவிதமான விநாய கர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
2,600 விநாயகர் சிலைகள்
சென்னையில் மட்டும் 2,600 விநாயகர் சிலைகளை பொது இடங் களில் நிறுவி வழிபட போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். அதன் படி, அனுமதி வழங்கப்பட்ட இடங் களில் சிலைகள் வைக்கப்பட்டன. தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கடந்த வாரம் மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
10 ஆயிரம் போலீஸார்
இதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவின்பேரில் தமிழக முழு வதும் போலீஸார் உஷார் நிலை யில் உள்ளனர். அசம்பாவிதங் களை தடுக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் மேற்பார்வையில் 3 கூடுதல் காவல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 12 துணை ஆணை யர்கள் தலைமையில் 10 ஆயிரம் போலீஸார் சென்னையில் கண் காணிப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுக்காக விநாய கர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என்பதற் காக கடலோர பாதுகாப்பு குழு மத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நேற்று போலீஸார் தீவிர வாகன சோதனை மற்றும் தணிக்கையில் ஈடுபட்ட னர். சந்தேகத்துக்குரிய நபர் களை பிடித்து தனி இடங்களில் வைத்து விசாரணையும் நடத்தப் பட்டது.
இதற்கிடையில் இன்று பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வரும் 5, 7 மற்றும் 8-ம் தேதிகளில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர், நீலாங்கரை பல்கலை நகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் உள்பட 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.
விநாயகர் கண்காட்சி
குரோம்பேட்டையைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணரான சீனிவாசன், கடந்த 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சிலை கண்காட்சியை நடத்தி வருகிறார். 13-ம் ஆண்டு கண்காட்சி, சிட்லபாக்கம் காந்தி தெருவில் உள்ள லட்சுமி ராம் கணேஷ் மகாலில் நேற்று தொடங்கியது.
அத்திவரதர் விநாயகர்
அத்தி மரத்தில் செய்யப்பட்ட ஏழரை அடி அத்திவரதர் விநாயகர், ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், சயன கோல விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 12 ஆயிரம் சிலைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியை வரும் 9-ம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என அமைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.