அடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கர்ப்பப் பைக்குள் இருந்த 4-வது குழந்தைக்கு தொப்புள் கொடி வழியாக ரத்தம் ஏற்றி காப்பாற்றினர்: எழும்பூர் அரசு தாய் சேய் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தை காப்பாற்றப்பட்டதை, கேக் வெட்டி கொண்டாடிய டாக்டர்கள்.
சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தை காப்பாற்றப்பட்டதை, கேக் வெட்டி கொண்டாடிய டாக்டர்கள்.
Updated on
2 min read

சி.கண்ணன் 

சென்னை

அடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரி ழந்த நிலையில் கர்ப்பப்பைக்குள் இருந்த 4-வது குழந்தைக்கு தொப் புள் கொடி வழியாக ரத்தம் ஏற்றி சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள் ளனர்.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவரது மனைவி பாஞ்சாலை (35). திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பின்னர் பாஞ் சாலை கருவுற்றார். அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டார். ஆனால், குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதையடுத்து, இரண்டாவது குழந்தையும், மூன்றா வது குழந்தையும் பிறந்தவுடன் இறந்துவிட்டன.

இந்நிலையில், நான்காவது முறையாக கருவுற்ற பஞ்சாலை ஆரம்பத்திலேயே எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு வந்தார். இதற்கு முன் 3 குழந்தைகள் இறந்த சம்பவத்தை டாக்டர்களிடம் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தபோது, தாய்க்கு நெகட்டிவ் வகை ரத்தமும், கர்ப்பப்பையில் இருந்த குழந்தைக்கு பாசிட்டிவ் வகை ரத்தமும் இருப்பது தெரியவந்தது.

தாயின் நெகட்டிவ் வகை ரத் தத்தால் குழந்தையின் ரத்த சிவப் பணுக்கள் அழிவதும், ரத்த சோகை ஏற்படுவதும், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கெனவே, 3 குழந்தைகள் உயிரிழக்க இதுவே காரணம் என்பதை தெரிந்துகொண்ட டாக்டர்கள், இந்தக் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

இதையடுத்து, கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு போதிய அளவு ரத்தம் கொடுக்க டாக்டர் கள் முடிவு செய்தனர். கருவின் 28 வாரத்தில் நவீன கருவிகளின் உதவியுடன் தாயின் கர்ப்பப் பைக்குள் இருந்த குழந்தைக்கு தொப்புள் கொடி வழியாக ரத்தம் கொடுத்தனர். 32-வது வாரத்தில் மீண்டும் ரத்தம் குறைந்ததால், தொப்புள் கொடி வழியாக டாக் டர்கள் ரத்தம் ஏற்றினர்.

34 வாரத்தில் சிசேரியன்

இதற்கு மேலும் குழந்தை கர்ப்பப் பைக்குள் இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த டாக்டர்கள், 34 வாரத்தில் சிசேரியன் செய்து ஆண் குழந் தையை வெளியே எடுத்தனர். குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்ததால் அதற்கு மூச்சுத்திணறல் இருந்தது. நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருந்ததால், குழந் தைக்கு செயற்கை சுவாசம் கொடுத்து தேவையான சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.

தாயின் கர்ப்பப்பையில் இருந்து வெளியே வந்த பின்னரும், குழந்தையின் ரத்த சிவப்பணுக்கள் அழிந்து வருவதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்துவிட்டு புதிய ரத்தத்தை செலுத்தினர். குழந்தையின் ரத்த சிவப்பணுக்கள் அழிவதை தடுக்க தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

2 வாரங்களுக்கு தீவிர சிகிச் சைப் பிரிவில் வைத்து கண் காணித்து குழந்தையை டாக்டர் கள் காப்பாற்றினர். இதை டாக்டர்களும், செவிலியர்களும் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதுதொடர்பாக எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவுத் தலைவர் மங்கள பாரதி கூறிய தாவது:

நெகட்டிவ் ரத்த வகை கொண்ட தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்த வகை இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும். குழந் தையின் பாசிட்டிவ் ரத்தத்தை தாயின் நெகட்டிவ் ரத்தம் ஏற்றுக் கொள்ளாது.

ஒருவருக்கு ரத்தம் குறைவாக இருந்தால் எளிதாக ரத்தம் ஏற்றிவிடலாம். ஆனால், கர்ப்பப் பைக்குள் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் ஏற்றுவது மிகவும் சவாலானது.

2 முறை ரத்தம் ஏற்றினோம்

குழந்தையை காப்பாற்ற வேண்டுமென முடிவு செய்து, கர்ப்பப்பைக்குள் இருந்த குழந்தைக்கு தொப்புள் கொடி வழியாக இரண்டு முறை ரத்தம் ஏற்றினோம்.

40-வாரம் வரை காத்திருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பது தெரிந்தது. அதனால், குறைப்பிரசவமாக இருந்தாலும் இருக்கட்டும் என்று 34-வது வாரத் தில் சிசேரியன் செய்து குழந் தையை வெளியே எடுத்தோம்.

கர்ப்பப்பையில் இருக்கும் குழந் தையை காப்பாற்றும் பொறுப்பை மருத்துவமனை இயக்குநர் ஷோபா, மகப்பேறு டாக்டர்கள் சீதாலட்சுமி, தீபா பிரியா ஆகி யோரும், சிசேரியன் செய்து குழந் தையை எடுத்த பின்னர் நான் (மங்கள பாரதி), டாக்டர்கள் வைத்தீஸ் வரன், நாராயணன் ஆகியோரும் கவனித்துக் கொண்டோம்.

தற்போது குழந்தை நலமாக இருக்கிறது. மூன்று குழந்தைகள் இறந்த நிலையில் நான்காவது குழந்தை நலமுடன் இருப்பது கண்டு சுரேஷ், பாஞ்சாலை தம்பதி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in