இன்று விநாயகர் சதுர்த்தி: முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் சாலையோரக் கடையில் இருந்து வாங்கிய களிமண் விநாயகரை பலகையில் வைத்து எடுத்துச் செல்லும் சிறுமி.படம்: க.ஸ்ரீபரத்
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் சாலையோரக் கடையில் இருந்து வாங்கிய களிமண் விநாயகரை பலகையில் வைத்து எடுத்துச் செல்லும் சிறுமி.படம்: க.ஸ்ரீபரத்
Updated on
2 min read

சென்னை

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அரசியல் கட்சியி னர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் பழனிசாமி: ஐந்து கரத்தான் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வினை களை களைந்தெறியும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல் லங்களில், களிமண்ணாலான விநாயகர் சிலையை வைத்து, அரு கம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை விநாயக ருக்கு படைத்து, பக்தியுடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தி திரு நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். வேண்டுபவர் களுக்கு வேண்டியதை அருளும் விநாயகப் பெருமானின் அவதார நாளில், வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும், நாடெங் கும் நலமும் வளமும் பெருகட்டும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: ஓம் எனும் ஓங்கார வடிவமாய் விளங்கும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய்நொடி இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: எந்த ஒரு நல்ல செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது வழக் கம். அதுமட்டுமல்லாமல் எளிய மக்களின் கடவுளாக, நினைத் ததைப் பிடித்து வைத்து வழிபடக் கூடியவராக, விருப்பப்பட்டபடி எல்லாம் பெயர் வைத்து கொண் டாடப்படுபவராக இருப்பது விநாயகக்கடவுளின் தனிச்சிறப்பு. இந்த நன்னாளில் விநாயகரின் அருளால் துன்பங்கள் அகன்று, வளமும் நலமும் பெருகட்டும். அன்பும் அமைதியும் உலகில் தழைத்து ஓங்கட்டும்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: நல்லனவற்றை நினைப்பது. நல்லனவற்றை செய்வது ஆகிய வையே இன்றைய உலகில் மிக தேவையான ஒன்றாகும். எதிர் மறை சிந்தனைகள் ஒழிந்து, நேர் மறை எண்ணங்கள் வளர விநாய கரை வழிபட வேண்டும் என முன் னோர்கள் கூறுவார்கள்.

குறிப்பாக பள்ளி மாணவர் களும், இளைஞர்களும் எதிர் கால இந்தியாவின் வளமைக் கும் வளர்ச்சிக்கும் தங்களின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்வதற்கான பண்டிகையாக இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை பயன்படுத் திக்கொள்ளவேண்டும்.

சமக தலைவர் ரா.சரத்குமார்: விநாயகப் பெருமானின் மகா சதுர்த்தி திருநாள், உலகம் முழு வதும் உள்ள இந்து மதத்தினரால் விமரிசையாக போற்றி கொண் டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்திலும் உள்ள தடைகள் நீங்கி வெற்றியும், மகிழ்வும், மனநிறைவும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு விநாயகப் பெருமானின் நல்லருள் அனைவ ருக்கும் கிடைக்க வேண்டும்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in