புதுச்சேரி, காரைக்காலில் 2 சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்ட கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி, காரைக்காலில் 2 சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்ட கிரண்பேடி ஒப்புதல்
Updated on
1 min read

புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாலைகளுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழைப் போற்றும் வகையில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலை - ராஜீவ் காந்தி சிலை உட்பட்ட பகுதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் சூட்ட அமைச்சரவையில் கடந்த ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும், அவரது பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கான கோப்புக்கு ஒப்புதல் தந்துள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை மூலம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி வந்த கோப்பில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள இரு சாலைகளுக்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் சூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அக்கோப்புக்கு ஒப்புதல் தந்துள்ளதாக கிரண்பேடி இன்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in