Published : 01 Sep 2019 09:07 AM
Last Updated : 01 Sep 2019 09:07 AM

மின்சார வாகனங்கள் குறித்த அரசின் கொள்கை விரைவில் அறிவிப்பு: போக்குவரத்துத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

கோவை

மின்சார வாகனங்கள் தொடர் பான தமிழக அரசின் கொள்கை இன்னும் 3 வாரங்களில் அறிவிக்கப் படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மின்சாரத்தால் இயங்கும் வாக னங்களை உருவாக்கும் பல்வேறு தொழில்துறையினர் இணைந்து சொசைட்டி ஃபார் ஸ்மார்ட் இ-மொ பிலிட்டி என்ற சங்கத்தை உருவாக்கி யுள்ளனர். இதன் தொடக்க விழா கோவையில் நேற்று நடைபெற்றது. இந்த சங்கத்தை தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பெட்ரோலி யப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாது காக்கும் வகையில், மின்சாரத்தால் இயங்கும் மின்சார வாகனங் களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் கோவை முன்னோடி யாகத் திகழ்கிறது.

இந்த நிலையில், இந்தியா விலேயே முதல்முறையாக, மின்சார வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தொழில் துறை யினர் இணைந்து ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளது பாராட்டுக் குரியது.

தற்போது மின்சார பேருந்து போக்குவரத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. பயணி வாகனப் பயன்பாட்டைப் பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் பயன் பாடு தற்போது மிகக் குறைந்த அளவில் இருந்தாலும், படிப்படி யாக அதிகரிக்கும். 2030-ம் ஆண்டுக் குள் 30 முதல் 35 சதவீத வாகனங் கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

525 பேருந்துகள்

தமிழக அரசு மின்சார வாக னங்கள் தொடர்பான கொள்கையை இன்னும் 3 வாரங்களில் அறி விக்க உள்ளது. இதில், மின்சார வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் மட்டு மின்றி நுகர்வோரும் பயனடையும் வகையில் பல்வேறு சலுகைகள், திட்டங்கள், வரி குறைப்பு அறிவிப் புகள் இடம் பெற்றிருக்கும். தமிழக அரசு முதல்கட்டமாக மின்சாரத்தால் இயங்கும் 525 பேருந்துகளை இயக்க உள்ளது.

கோவையில் 100, திருப்பூரில் 50, ஈரோட்டில் 50, சேலத்தில் 50 என மேற்கு மண்டலத்தில் மட்டும் 250 பேருந்துகள் இயக் கப்படும். இன்னும் சில மாதங்களில் இவை நடைமுறைக்கு வந்துவிடும். இதேபோல, இவற்றுக்கான சார்ஜர் மையங்களும் தேவைக்கேற்ப அமைக்கப்படும். இதன்மூலம் புதிதாக வேலைவாய்ப்புகளும் உருவாகும். மேலும், சூரிய ஒளி மின்சார நிலையங்கள், சார்ஜர் மையங்களும் உருவாக்கப்படும்.

மின்சார வாகனங்களின் விலையில், அதன் பேட்டரிக்கான விலை மட்டுமே சுமார் 50 சதவீதம் உள்ளது. நவீனத் தொழில்நுட்பம், அதிக உற்பத்தி, அரசின் சலுகை கள் போன்றவற்றால் இந்த விலை வெகுவாகக் குறையும். அப் போது, அனைத்துத் தரப்பினரும் வாங்கும் வகையில் மின்சார வாகனங்களின் விலை குறைந்து விடும்.

அனைத்து அரசுப் பேருந்துகளி லும் பயணம் செய்யப் பயன்படுத் தக்கூடிய வகையில், `பொது பயன் பாட்டு அட்டையை' உருவாக்க முயற்சித்து வருகிறோம். தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் பேருந் துகளில் 50 சதவீதம் புத்தம் புதிய பேருந்துகளாகும். அதே சமயம், கட்டணமும் மிகக் குறைவு. எனவே, தீபாவளி உள்ளிட்ட பண்டி கைக் காலங்களில் அரசுப் பேருந்து களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிலுவைத் தொகை

அரசுப் போக்குவரத்துக் கழகத் தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர் களின் பணப் பலன் நிலுவைக்காக ரூ.1,093 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நிலுவைத் தொகையை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இன்னும் 10, 15 நாட்களில் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x