கோயம்பேட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தை; பூஜை பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்: கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே பொருட்களை வாங்கினர்

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை நேற்று தொடங்கியது. அதில் பேரிக்காய், வண்ணக்குடைகள், கரும்பு உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.படங்கள்: ம.பிரபு
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை நேற்று தொடங்கியது. அதில் பேரிக்காய், வண்ணக்குடைகள், கரும்பு உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.படங்கள்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தை வளா கத்தில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக நேற்றே ஏராள மானோர் பூஜை பொருட்களை வாங்க குவிந்தனர்.

கோயம்பேடு சந்தை நிர்வாக குழு சார்பில், கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டும் சிறப்புச் சந்தை திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி சிறப்புச் சந்தை கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கியது. இங்கு பண்டிகைக்குத் தேவையான அனைத்து பூஜை பொருட்களும் கிடைப்பதால், பொதுமக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பைப் பெற் றுள்ளது.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கோயம் பேடு சந்தைக்கு வெளியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி றது. விநாயகர் சதுர்த்தியன்று நெரிசல் அதிகமாக இருக்கும் என் பதால், அதைத் தவிர்க்க நேற்று பொதுமக்கள் அதிக அளவில் சிறப்புச் சந்தையில் குவிந்து பூஜை பொருட்களை வாங்கினர்.

விநாயகர் சிலைகள்

இந்த சிறப்புச் சந்தையில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் ரூ.750 வரை யும், சிலைக்கான குடை ரூ.10 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகின்றன. மேலும் ஒரு தேங்காய் ரூ.10 முதல் ரூ.30 வரை, 20 கம்பு கதிர்கள் கொண்ட கட்டு ரூ.50, 5 தென்னை ஓலை தோரணங்கள் கட்டு ரூ.10, வாழை இலை ரூ.10, பூசணிக்காய் ரூ.50, மாக்காச்சோளக் கதிர் ரூ.10, அருகம்புல் ஒரு கட்டு ரூ.25, மாவிலை கொத்து ரூ.10, துளசி கட்டு ரூ.10, இரு வாழைக் கன்று ரூ.25, எருக்கம் பூ மாலை ரூ.15, சாமந்திப்பூ முழம் ரூ.20, கதம்ப பூ முழம் ரூ.20, மல்லிகைப்பூ முழம் ரூ.15, கனகாம்பரம் பூ முழம் ரூ.25, ஒரு படி பொரி ரூ.10, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.30, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.120, ஆப்பிள் கிலோ ரூ.120, சாத்துக்குடி கிலோ ரூ.80, விளாம்பழம் கிலோ ரூ.50, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.60, மாதுளை ரூ.120, 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.400, ஒரு கரும்பு ரூ.50 என விற்பனை செய்யப்படுகின்றன. இந்தச் சந்தையில் பொரி, கரும்பு, வாழைக் கன்று ஆகியவை அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அங்கு அதிக அளவில் விற்பனையாகும் பொருளாகவும் அவை இருந்தன.

இச்சந்தைக்கு வந்திருந்த அண் ணாநகரைச் சேர்ந்த பார்த்திபன்-கவிதா தம்பதி கூறும்போது, ‘‘ஒரே இடத்தில் அனைத்து வகையான பூஜை பொருட்களும் கிடைக்கின்றன. ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நெரிசலைத் தவிர்க்க இப்போதே பொருட்களை வாங்கிச் செல்கிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in