சென்னை கோயம்பேட்டில் திறக்கப்பட்டுள்ள நவீன ஆதார் மையத்தில் குழந்தையை படமெடுக்கும் பணியாளர்.படம்: ச.கார்த்திகேயன்
சென்னை கோயம்பேட்டில் திறக்கப்பட்டுள்ள நவீன ஆதார் மையத்தில் குழந்தையை படமெடுக்கும் பணியாளர்.படம்: ச.கார்த்திகேயன்

சென்னை கோயம்பேட்டில் நவீன ஆதார் சேவை மையம் திறப்பு: திருச்சி, கோவை மாநகரங்களிலும் விரைவில் திறக்க திட்டம்

Published on

சென்னை

சென்னை கோயம்பேட்டில் நவீன ஆதார் சேவை மையம் திறக்கப் பட்டுள்ளது. திருச்சி மற்றும் கோவை மாநகரங்களிலும் இதுபோன்ற சேவை மையங்களை திறக்க இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது.

பெரும்பாலான அரசு சேவை களைப் பெற ஆதார் கட்டாயமாக் கப்பட்டு வருகிறது. அதனால், ஏற்கெனவே ஆதார் எண் பெற் றுள்ள குழந்தைகள், 5 வயதை பூர்த்தி அடையும்போதும், வாடகை வீட்டில் குடியிருப்போர் வீடு மாறும் போதும், தங்கள் ஆதார் விவரங் களை திருத்த வேண்டியுள்ளது. புதிய ஆதார் பதிவுகளை மேற் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

யுஐடிஏஐ நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு முக மைகள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அதில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பு, மையங்களில் போதிய அடிப் படை வசதிகள் இன்மை, ஆபரேட் டர்களின் அணுகுமுறையில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் 53 நகரங்களில் 114 நவீன ஆதார் சேவை மையங்களை திறக்க யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளது. அதன் படி, டெல்லி, ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா, உத்தரப்பிர தேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா, ஹரியாணா மாநிலத்தில் ஹைசர் போன்ற நகரங்களில் ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக தமிழ கத்தில் முதல்முறையாக சென்னை கோயம்பேட்டில் நேற்று திறக்கப் பட்டது. இது புறநகர் பேருந்து நிலையம் அருகில், ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள மாலின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது.

காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை இந்த அலுவலகம் செயல்படும். வாரந்தோறும் செவ் வாய்க்கிழமை மற்றும் மத்திய அரசு விடுமுறை நாட்களில் இம்மையம் இயங்காது. ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும்.

இம்மையம் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, ஆடவர் மற்றும் மகளிருக்கென தனித்தனி கழிவறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் மின் தூக்கி, முதியோருக்கு வசதியாக நகரும் படிக்கட்டு வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களுக்கு விண் ணப்பங்களை பூர்த்தி செய்து தர இரு உதவியாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 16 இடங் களில் ஆதார் பதிவு, திருத்தங் களை மேற்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட் டுள்ளன. பொதுமக்கள் உள்ளே நுழைந்தால் 1 மணி நேரத்தில் பணிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் வகையில் இந்த அலுவலகம் வடிவமைக்கப்பட் டுள்ளது. இங்கு 5 வயதுக்கு உட் பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படு கின்றன. யுஐடிஏஐ இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொண்டும் வரலாம்.

பயோமெட்ரிக் பதிவு

தற்போது இந்த மையத்தில் ஆதார் பதிவு, ஆதார் திருத்தம், ஏற்கெனவே ஆதார் பதிவு மேற் கொண்ட குழந்தைகள் 5 வயதை கடந்த பின்னர், கைவிரல் ரேகை மற்றும் கருவிழிப் படலம் போன்ற பயோமெட்ரிக் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

விரைவில், ஆதார் அட்டை தொலைந்தால் புதிய அட்டை பெறும் வசதி, வண்ணத் தாளில் அச்சிட்டு பெறும் வசதி, கைப்பேசி செயலி மற்றும் ஏடிஎம் கார்டு வழியாக கட்டணம் செலுத்தும் வசதி ஆகியவை கொண்டுவரப்பட உள்ளன. இம்மையத்தில் நாளொன் றுக்கு 1,000 பேருக்கு சேவை வழங்க முடியும்.

இதேபோன்று சென்னையில் மேலும் 3 மையங்களை திறக்க யுஐடிஏஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்தகட்டமாக கோவை, திருச்சி ஆகிய மாநக ரங்களில் தலா 2 மையங்கள் மற் றும் புதுச்சேரியில் 1 மையம் விரை வில் திறக்கப்பட உள்ளன.

இதற்கிடையே, அங்கு குழந் தைக்கு ஆதார் பதிவு மேற்கொண்ட பெற்றோர் கூறும்போது, "இந்த அலு வலக சூழல் மகிழ்ச்சியாக இருக் கிறது. சில நிமிடங்களில் வேலை முடிந்து விட்டது. எங்கள் குழந்தை களும் முரண்டு பிடிக்காமல் ஆதார் பதிவுக்கு ஒத்துழைத்தனர். அனைத்து வசதிகளுடன் இது போன்று மையத்தை ஏற்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது" என்றனர்.

வாகன நிறுத்த கட்டணம்

இந்த மையம் ஒரு மாலில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக திறக்கப்பட உள்ள மையங்களும் ஏதாவது ஒரு மால் வளாகத்திலேயே அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரி கிறது. இவற்றில் அந்தந்த மால் களுக்கு ஏற்ப ஒரு மணி நேரத் துக்கு வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கூடு தல் செலவாக இருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆதார் அட்டை தொலைந்தால் புதிய அட்டை பெறும் வசதி, கைப்பேசி செயலி மற்றும் ஏடிஎம் கார்டு வழியாக கட்டணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in