

சென்னை
பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் நட வடிக்கையை கண்டித்து, தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு, 4 வங்கிகளாக மாற்றம் செய்யப் படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்கு வங்கி ஊழியர்கள், அதி காரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, நாடு முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உட்பட தமி ழகம் முழுவதும் பல்வேறு வங்கி ஊழியர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் நேற்று பணியில் ஈடுபட்டனர்.
சென்னை பாரிமுனையில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் ஏற்கெனவே சரிந்துகொண்டு இருக்கும் பொரு ளாதாரத்தை சரிசெய்வதற்கு பதி லாக, பொருளாதார சீர்குலைவை சரிசெய்ய உதவும் வங்கிகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்து வதற்கு பதிலாக, திடீரென 10 வங்கி களை 4 வங்கிகளாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 100 ஆண்டுகளாக திறமையாக செயல்பட்டுவரும் 6 பொதுத் துறை வங்கிகளை மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், நாட்டின் பொருளா தாரத்துக்கும், வங்கித் துறைக்கும், பொதுமக்களுக்கும் மிகப் பெரிய நெருக்கடி ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள வங்கிகள் பொதுமக்களின் சேமிப்புத் தொகை ரூ.127 லட்சம் கோடியை வைத்துள் ளன. மக்களின் இந்த சேமிப்பு பணத் துக்கு பாதுகாப்பு வேண்டும் என் றால் திறமையான வங்கிகள்தான் அவசியமே தவிர, அளவில் பெரிய வங்கிகள் தேவை இல்லை.
விவசாயம், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்காக கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள், பெரிய வங்கிகளாக மாற்றப்பட்டு அம்பானி, அதானி போன்ற பெரிய முதலாளிகளுக்கு கடன் கொடுக்கும் நிலை ஏற்படும்.
ரூ.15 லட்சம் கோடி வாராக் கடனாக உள்ளது. இந்த சூழலில் வங்கிகளை இணைப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வங்கி களின் வளர்ச்சிக்கும் உதவாது. ஏற்கெனவே, பாரத ஸ்டேட் வங்கி இணைக்கப்பட்டதால் 7 ஆயிரம் கிளைகள் மூடப்பட்டன. அதே போல, இந்த 6 வங்கிகள் மூடப்படு வதன் மூலம், ஆயிரக்கணக்கான கிளைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.