Published : 31 Aug 2019 09:43 PM
Last Updated : 31 Aug 2019 09:43 PM

சென்னையில் 2600 விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி : 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு 

சென்னையில் 2600 விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சிலை பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் இந்துக்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் நிகழ்வுகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற செப். 02 அன்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் நிறுவி வழிபாடு செய்து பின்னர் கடலில் கரைக்க உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசு வகுத்துள்ள வழிக்காட்டு விதிமுறைகளின் படியும் சென்னை பெருநகர் முழுவதும் 2600 விநாயகர் சிலைகள் நிறுவி விழிபாடு நடத்த பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி, 3 காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், 6 இணை ஆணையாளர்கள், 12 துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 10 ஆயிரம் போலீசார் சென்னை பெருநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடுகள் முடிந்து பிறகு வருகின்ற 05.9.2019, 07.9.2019 மற்றும் 08.9.2019 ஆகிய 3 தினங்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாகச் சென்று கடலில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்கள்:

1.ராமகிருஷ்ணா நகர், எண்ணூர், 2.பாப்புலர் எடைமேடை பின்புறம், திருவொற்றியூர், 3.Unit of Universal Carborandum பின்புறம், திருவொற்றியூர், 4.காசிமேடு மீன்பிடி துறைமுகம், 5.சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், 6.பல்கலை நகர், நீலாங்கரை ஆகிய 6 இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க மேற்கண்ட இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில், சென்னை பெருநகர காவல்துறையினர் மூலம் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

மேலும், விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்பட்ட ஊர்வலப் பாதைகளிலும், சிலை கரைக்கும் இடங்களிலும் காவல்துறையினர் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x