பின்லாந்து மழலையர் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு: கற்பித்தல் முறைகளை தமிழகத்தில் அமல்படுத்த முடிவு 

பின்லாந்து மழலையர் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு: கற்பித்தல் முறைகளை தமிழகத்தில் அமல்படுத்த முடிவு 
Updated on
1 min read

சென்னை

பின்லாந்து நாட்டிலுள்ள மழலை யர் பள்ளியைப் பார்வையிட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன், அங்குள்ள கல்வி முறை பற்றியும் ஆய்வு செய்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை யில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட கற்றல் பணிகளில் பல் வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதன் படி மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் சுற்றுப்பயணம் சென்று அங்குள்ள சிறந்த கல்வித் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்.

இதற்கிடையே சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த பின்லாந்து கல்வித் துறை அதிகாரிகள் தங்கள் நாட்டுக்கு வரும்படி செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தனர். அதையேற்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலர் பிரதீப் யாதவ் தலைமையிலான கல்விக்குழு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு 28-ம் தேதி புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் பின்லாந்து நாட்டின் ஜோன்சு ஹெய்னாபுரோடு நகரத்தில் உள்ள லிலுன்லாட்டி மழலையர் பள்ளியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பார் வையிட்டார். அந்தப் பள்ளியில் பின்பற்றப்படும் கல்விமுறை, கற்றல் உபகரணங்கள், மாணவர் கள் கற்றல் திறன் உள்ளிட்ட அம் சங்கள் குறித்து ஆய்வு செய்த துடன், பள்ளி முதல்வர் டீனா திலி கெய்னேன் கோசேனென் உடன் கலந்துரையாடினார். மேலும், சில பள்ளிகளிலும் தமிழக கல்விக்குழு ஆய்வினை மேற்கொண்டது.

இதற்கிடையே, பின்லாந்து பள்ளிகளில் மாணவர்கள் தனித் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கற்பித்தல் முறை, கல்விக்குழுவை பெரிதும் கவர்ந் துள்ளதாகவும், அதை தமிழகத்தில் அறிமுகப்படுத்த பரிசீலனை செய்ய போவதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுவீடனில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டின் கல்வி முறைகள் குறித்தும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in