Published : 31 Aug 2019 11:22 AM
Last Updated : 31 Aug 2019 11:22 AM

தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுகதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பெருமிதம்

தூத்துக்குடி

தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுகதான் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ‘‘மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது. தமிழகத்திலே பிக்பாஸ் என்று சொன்னால், அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

1972-ல் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக செயல்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு, 1979-ல் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-ல் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது.

தமிழகத்தின் பிரச்சினைகள், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை, திமுக விட்டுச்சென்ற உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது. இந்தப் பெருமை எங்களையே சேரும்.

இதிலிருந்தே பிக்பாஸ் யார் என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளலாம்’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தினந்தோறும் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x