ஈஷா அறக்கட்டளையின் ‘காவிரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் காவிரி வடிநிலப் பகுதியில் 242 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்: விழிப்புணர்வு பிரச்சாரத்தை செப்.3-ல் தொடங்குகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்

காவிரி வடிநிலப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார பயண அறிவிப்பை வெளியிட்ட, ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன். உடன் காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் அரியானூர் ஜெயச்சந்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன்,மரப்பயிர் விவசாயி தெய்வசிகாமணி. படம்: ச.கார்த்திகேயன்
காவிரி வடிநிலப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார பயண அறிவிப்பை வெளியிட்ட, ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன். உடன் காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் அரியானூர் ஜெயச்சந்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன்,மரப்பயிர் விவசாயி தெய்வசிகாமணி. படம்: ச.கார்த்திகேயன்
Updated on
1 min read

சென்னை

காவிரி வடிநிலப் பகுதியில் 242 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், செப்.3-ல் தலைக்காவிரியில் தொடங்குகிறார்.

இதுதொடர்பாக ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டி ருந்த காவிரி, பல ஆண்டுகளாக, ஆண்டின் பல மாதங்கள் வறண்டு காணப்படுகிறது.

காவிரியில் கடந்த 50 ஆண்டு களில், வழக்கமாக வரும் நீர் அளவை விட தற்போது 40 சதவீதம் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், தமிழகத்தில் காவிரி வடிநிலமாக உள்ள 18 மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பசுமை பரப்பில் 87 சதவீதம் இப்போது இல்லை. இந்த பசுமை பரப்பை மீட்டெடுத்து, காவிரியை மீண்டும் வற்றாத ஜீவநதியாக மாற்றும் நோக்கத்தில், ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை தொடங்கியுள்ளது.

4 ஆண்டுகளில்...

இந்த இயக்கம் மூலம், காவிரி வடிநிலப் பகுதியில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 ஆண்டுகளில் 73 கோடி மரங் களை நட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு கள், கோவை வேளாண் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளை யம் வனக்கல்லூரி ஆகியவற்றின் உதவியோடு இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.

இதற்காக செப். 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னை வரை ஈஷா அறக்கட் டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்திட்டத்தை தமிழக விவசாயி கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்திக்கொள்ள வேண்டும். இத்திட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத்திட்டம் வெற்றி அடையும்போது, உலகத்தில் ஒரு முன்னோடி பகுதியாக தமிழகம் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது, காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்ட மைப்பு தலைவர் அரியானூர் ஜெயச்சந்திரன், தமிழக விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், மரப் பயிர் விவசாயி தெய்வசிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in