

சி.கண்ணன்
சென்னை
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த தொண்டை அடைப்பான் நோய் தற்போது பரவி வருவதால் அனைத்து பள்ளி மாணவ, மாண விகளுக்கும் தடுப்பூசி போட சுகா தாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தென்மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ‘தொண்டை அடைப்பான் (டிப்தீரியா)' நோய் தீவிரமடைந்து வருகிறது. இது தொற்றுநோய் என்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பரவத் தொடங்கியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த நோய் தற்போது சென்னை, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறு வர்கள் பலரை தாக்கி வருகிறது. இதனால் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை எழும்பூர் அரசு குழந் தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரு கிறது. இதனால் பெற்றோர் அச்ச மடைந்துள்ளனர். தமிழகத்தில் தொண்டை அடைப்பான் நோய் பரவாமல் தடுக்க தமிழகம் முழு வதும் பள்ளி மாணவ, மாணவி களுக்கு தடுப்பூசி போட சுகா தாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருத் துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறிய தாவது:
வெளிமாநிலங்களில் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழகத் துக்கு வருகின்றனர். இது தொற்று நோய் என்பதால் அவர்களின் இருமல், தும்மல் போன்றவற்றால் இந்நோய் தமிழகத்தில் பரவி வரு கிறது. இதைத் தடுக்க தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக நோய் பாதிப்புள்ள இடங்களில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் மற்றும் ரண ஜென்னி தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட் டுள்ளது. அதேபோல் நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 5-வது மற்றும் 10-வது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற் காக தனியாக குழு அமைக்கப் பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கும் இனி தடுப்பூசி போட வேண் டும் என்று அரசு மற்றும் தனி யார் டாக்டர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தொண்டை அடைப்பான் நோயை கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. தொண்டை வலி, காய்ச்சல் இருந் தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். இந் நோய்க்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் போது மான அளவு உள்ளன.
இவ்வாறு குழந்தைசாமி தெரிவித்தார்.