Published : 31 Aug 2019 07:58 AM
Last Updated : 31 Aug 2019 07:58 AM

மின்சார பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து பணிமனைகளில் விரைவு சார்ஜர் மையங்கள்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு அரசு போக்கு வரத்து பணிமனைகளில் புதிதாக ‘விரைவு சார்ஜர் மையங்கள்’ (Fast Charger Centres) சோதனை முறையில் நிறுவப்பட உள்ளன.

நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைத்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களிலும், நெடுஞ்சாலை களிலும் பொதுத்துறை மற்றும் தனியாருடன் இணைந்து சார்ஜர் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மின்சார வாகனங்களுக்கான சாலை வரியை குறைக்க வேண் டும் என்றும் பர்மிட் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும் என் றும் மத்திய போக்குவரத்து அமைச்ச கம் மாநில போக்குவரத்து ஆணை யர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் மின் சார வாகனங்கள் இயக்குவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையை தமிழக அரசு விரைவில் வெளியிட இருக்கிறது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை போன்ற பெருநகரங் களில் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு முக்கிய இடங்களை தேர்வு செய்து அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு சார்ஜர் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோல், அரசு போக்கு வரத்து பணிமனைகளிலும் தேவைக்கு ஏற்ப சார்ஜர் மையங் களை அமைக்க திட்டமிட்டுள் ளோம். முதல்கட்டமாக 525 மின் சார பேருந்துகள் இயக்க அனு மதிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டி யலில் சென்னை இடம் பெற வில்லை. அடுத்த கட்டமாக விரை வில் வெளியாகும் பட்டியலில் 500 மின்சார பேருந்துகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. இதில், சென்னைக்கு மட்டும் 300 மின்சார பேருந்துகள் இயக்க ஒப்புதல் கிடைக்கும்.

சென்னை நகரில் முக்கிய தடங்களில் படிப்படியாக மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

40% எரிபொருள் குறையும்

முதல்கட்டமாக 1ஏ (சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர்) வழித் தடத்தில் சோதனை முறையில் மின்சார பேருந்து எந்தவிதமான தொழில்நுட்ப பிரச்சினையும் இல்லாமல் நன்றாக இயக்கப்பட்டு வருகிறது. கட்டணமாக குறைந்த பட்சம் ரூ.11 முதல் அதிகபட்சம் ரூ.25 வரை வசூலிக்கப்படுகிறது. எந்தவித சலுகை சீட்டுகளுக்கும் அனுமதி இல்லை. விரைவில் மற்றொரு வழித்தடத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும். மின்சார பேருந்துகளை இயக்குவதால் 40 சதவீத எரிபொருள் செலவு குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விரைவு சார்ஜர்கள்

இது தொடர்பாக அசோக் லேலண்டு நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிரிவு தலைமை மேலாளர் கார்த்திக் கூறுகையில், ‘‘சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் சோதனை முறையில் மின்சார பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள திறன்படி, ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 45 கி.மீ தூரம் வரை இயக்கலாம். ஒருநாளைக்கு சுமார் 200 கி.மீ தூரம் வரையில் இயக்கலாம். இந்தப் பேருந்தின் விலை ரூ.1.25 கோடி. இதற்கு சார்ஜ் செய்யும் வசதி பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனையில் உள்ளது.

மின்சார பேருந்துகளின் எண் ணிக்கை படிப்படியாக அதிகரிக் கும்போது, அதற்கான சார்ஜர் மையங்களையும், திறனையும் அதிகரிக்க முடியும். 5 நிமிடங் களில் பேருந்துகளுக்கான சார் ஜரை மாற்றலாம். தற்போது, சாதா ரண பேட்டரி சார்ஜர் அமைத் துள்ளோம்.

அடுத்ததாக, விரைவு சார்ஜிங் மையமும் சோதனை முறையில் அமைக்கப்படும். இதன்மூலம் மின்சார பேருந்துகளுக்கு விரை வில் சார்ஜ் செய்ய முடியும். ஓர் மின்சார பேருந்தின் பயண தூரத்தை கணக் கிட்டு, தேவைக்கு ஏற்ப சார்ஜர் களையும் அதிகமாக எடுத்துச் செல்லலாம். ரோபோட்டிக் சார் ஜர் மையம் அமைத்தால் ஒரே நேரத்தில் 20 பேருந்துகளுக்கு சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பமும் தற்போது உள்ளது" என்றார்.

பேருந்துகளில் சோலார் பேனல்

தொமுச பொருளாளர் கி.நட ராஜன் கூறும்போது, ‘‘கடந்த 1989-ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் போர் நடந்தபோது எண்ணெய் பற்றாக்குறையால் நம் நாட்டில் பல்வேறு இடங்களில் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது, சென்னையில் முதல்முறையாக பேட்டரி மூலம் ஓடும் 2 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டன. அவை நன்றாகவே ஓடின.

ஆனால், பேட்டரிகள் ரீசார்ஜ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகள் இனி யும் இல்லாமல் இருக்க புதிய தொழில்நுட்ப வசதிகளை மேம் படுத்த வேண்டும்.

மேலும், பேட்டரியை மட்டுமே நம்பி இருக்காமல், வெளிநாடுகளில் இருப்பது போல், பேருந்துகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல் கள் பதிந்து தேவையான மின்சாரத்தை தயாரித்து இயக்கவும் முயற்சிக்க வேண்டும்.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x