முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் வெளிநாடு பயணம்: புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்கின்றனர்

லண்டனில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்ற கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பழனிசாமியுடன் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலாளர் பீலா ராஜேஷ்.
லண்டனில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்ற கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பழனிசாமியுடன் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலாளர் பீலா ராஜேஷ்.
Updated on
2 min read

சென்னை

முதல்வர் பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள நிலை யில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் பல்வேறு கார ணங்களுக்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

சுகாதாரம், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பால்வளத் துறையின் கீழ் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்தவும் அந்த நாடுகளின் தொழிலதிபர் களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கவும் முதல்வர் பழனிசாமி அந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் பங்கேற்றார்.

இந்நிலையில், இன்று (ஆக.31) லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, நாளை (செப்.1) அமெரிக்கா செல்கிறார். அப்போது முதல்வருடன், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இணைந்து கொள்கின்றனர்.

இதற்காக 3 அமைச்சர்கள் மற்றும் தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் உள் ளிட்டோர் இன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ செல்கின்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன்

இவர்களை தவிர, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவா சனும், தற்போது வெளிநாடு பயணத்தில் இருக்கின்றனர். வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் (அக்.29) அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்ற னர். அங்கு, வனவிலங்கு பூங்காக் கள், சரணாலயங்கள், இரவு நேர பார்வையிடல் வசதி உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்துவிட்டு அடுத்த வாரம் தமிழகம் திரும்பு கின்றனர்.

கே.ஏ.செங்கோட்டையன்

அதேபோல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், கல்வித்துறை தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ளும்விதமாக, பின்லாந்து நாட்டுக்கு கடந்த 28-ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து சுவீடன் நாட்டுக்கும் அவர் செல்கிறார். ஒருவார பயணம் சென்றுள்ள அவருடன் துறை செயலர் பிரதீப் யாதவும் உள்ளார்.

கடம்பூர் ராஜூ

இவர்கள் மட்டுமின்றி, தமிழக அமைச்சரவையில் வேறு இரு அமைச்சர்களும் சமீபத்தில்தான் வெளிநாடு பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியுள்ளனர். முன்ன தாக கடந்த 23-ம் தேதி செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மொரீஷியஸ் நாட்டு துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை இல்ல திருமண விழாவில் பங் கேற்கச் சென்றார். அவர், 26-ம் தேதி பயணத்தை முடித்து தமிழகம் திரும்பினார்.

நிலோபர் கபீல்

அதேபோல், ரஷ்யாவின் காசான் நகரில் நடைபெற்ற உலக அளவி லான திறன்போட்டி அரங்கில், இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்களது படைப்புகளை காட்சிப் படுத்தியிருந்தனர். இவற்றை பார்வையிட தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் கடந்த 23 முதல் 26-ம் தேதி வரை ரஷ்ய பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in