

ஹெல்மெட் சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல் மெட் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் போலீஸார் சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சோதனை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹெல்மெட் குறித்த அறிவிப்புகள் வரும்போது சில நாட்கள் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதும், பின்னர் அதை கைவிடுவதும் வழக்கமாக இருந்து வந்தது. இந்த முறை அப்படி இருக்காது. சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் தொடர்ந்து சோதனை நடத்தி ஹெல் மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து போக்கு வரத்து காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில் நேற்று இரண் டாவது நாளாக தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஹெல் மெட் சோதனை நடந்தது. சென் னையில் நேற்று நடந்த சோதனை யில் 1285 பேரை பிடித்து ஆவணங் கள் மற்றும் வாகனங் களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.