

மதுரை
மதுரை திருமங்கலம் அருகே கப்ப லூர் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்ட ஊழியர்களைத் தாக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிய பிரபல ரவுடிகள் 5 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காருடன் 4 துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வந்த காருக்கு, ஊழியர்கள் கட்ட ணம் கேட்டனர். காரில் இருந்தவர் கள் கட்டணம் செலுத்த மறுத்து ஊழியர்களைத் தாக்கினர். இதில் ஊழியர்கள் 3 பேருக்கு காயம் ஏற் பட்டது. இதைப் பார்த்த சக ஊழி யர்கள் சுற்றி வளைத்தபோது திடீ ரென காரில் இருந்து இறங்கிய ஒரு வர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வானத்தை நோக்கிச் சுட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அங்கிருந்த போலீஸ்காரர் சுரேஷ், சுங்கச்சாவடி ஊழியர்களு டன் சேர்ந்து தகராறு செய்தவர் களை விரட்டிப் பிடிக்க முயன்றார். ஆனால், 4 பேர் காரில் ஏறி தப்பினர். துப்பாக்கியால் சுட்ட நபரை மட் டும் சுற்றி வளைத்துப் பிடித்து அவரை திருமங்கலம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்ற னர். காரில் தப்பிய கும்பலைப் பிடிக்க மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் உஷார் படுத்தப்பட்டன.
பிடிபட்ட நபர் திருச்சி அரியமங் கலத்தைச் சேர்ந்த ரவுடி சசிக் குமார்(28) எனத் தெரியவந்தது. தகவலறிந்த மதுரை எஸ்பி மணிவண்ணன் திருமங்கலம் காவல் நிலையத்துக்கு வந்து விசா ரணை செய்தார். இதற்கிடையே, காரில் தப்பிச் சென்றவர்கள் மதுரை - தேனி சாலையில் கருமாத் தூர் கோட்டையூர் அருகே காரை நிறுத்திவிட்டு ஆட்டோவில் தப்பிய தாக போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. போலீஸார் விரைந்து சென்று வாலாந்தூர் பகுதியில் சென்ற ஆட்டோவை மடக்கி 4 பேரையும் பிடித்தனர்.
அவர்கள், சென்னை எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன் (37), கார்த்திகேயன் (38), வியாசர்பாடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (33), வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா (34) ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள் மற்றும் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மதுரை எஸ்பி மணிவண்ணன் கூறும்போது, “கைதான ரவுடிகள் 5 பேரும் நேற்று கொலை வழக்கு தொடர் பாக திருநெல்வேலி நீதிமன்றத் தில் ஆஜராகிவிட்டு காரில் திரும்பி யுள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடி யில் கட்டணம் தர மறுத்து ஊழி யர்களைத் தாக்கி காயப்படுத்தினர். அப்போது ரவுடி சசிக்குமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் யாருக்கும் காய மில்லை. கைதான ரவுடி தனசேகரன் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், வேலூர் ரவுடி வசூர் ராஜா மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன” என்றார்.