Published : 30 Aug 2019 07:53 AM
Last Updated : 30 Aug 2019 07:53 AM

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை

மக்களுக்கு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றித் தரவேண் டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராக வேண் டும் என்று திமுக எம்.பி.க்க ளுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத் தில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங் களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா மற்றும் கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங் கோவன் உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 25 பேரும் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் 38 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம். பொதுத்தேர்தலில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாம், வேலூரில் 8 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்துள்ளது. அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண் டும் என்பதையே வேலூர் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது’’ என்று கூறிய தாக கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி. ஒருவர் ‘இந்து தமிழ்' நாளிதழி டம் தெரிவித்தார்.

கூட்டம் குறித்து மற்றொரு எம்.பி. யிடம் கேட்டபோது, ‘‘தேர்தலின் போது தொகுதி வாரியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நன்றி அறிவிப்புக் கூட் டங்களை உடனடியாக முடிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அலுவலகம் அமைத்து மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற வேண் டும். முடிந்த அளவுக்கு மக்களின் கோரிக்கைகைளை நிறைவேற்றித் தர வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவழிக்க வேண்டும். இதற்கு கட்சியின் அனைத்துமட்ட நிர்வாகிகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண் டும். அப்போதுதான் இனி வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேர வைத் தேர்தல்களில் நாம் எளிதாக வெல்ல முடியும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாம் இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதற்கு மக்களை அடிக்கடி நேரில் சந்திக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்’’ என்று ஸ்டாலின் அறி வுறுத்தியதாக கூறினார்.

கூட்டம் முடிந்ததும் செய்தி யாளர்களிடம் ஸ்டாலின் கூறிய தாவது:

திமுக தலைவராக நானும், பொருளாளராக துரைமுருகனும் ஓராண்டை நிறைவு செய்து 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத் துள்ளோம். இந்த ஓராண்டில் எங்களை ஊக்கப்படுத்திய ஊடகத் துறையினருக்கு நன்றி. எனது ஓராண்டு பணிகளை பாராட்டியும், விமர்சித்தும் பத்திரிகைகள் எழுதி யுள்ளன. ஆக்கப்பூர்வமான கருத் துகளையும் முன்வைத்துள்ளன. அவற்றை உள்வாங்கிக் கொண்டு எனது கடமையைச் செய்வேன்.

சோதனைகள், சாதனைகளை நான் எடைபோட்டுப் பார்ப்ப தில்லை. கருணாநிதி காட்டிய வழி யில் நின்று சோதனைகளை துணி வோடு சந்திக்க காத்திருக்கிறோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x