Published : 30 Aug 2019 07:46 AM
Last Updated : 30 Aug 2019 07:46 AM

ஒருமுறை பயன்படுத்திவிட்டு எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா?- மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா பதில்

சென்னை

ஒருமுறை பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு மத்திய ரசாய னம் மற்றும் உரத்துறை அமைச் சர் டி.வி.சதானந்த கவுடா பதிலளித் துள்ளார்.

சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள (மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவன (சிப்பெட்) வளாகத்தில் ரூ.23 கோடியே 70 லட்சம் செலவில் மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. 950 பேர் தங்கும் வகையில் 191 அறைகள் மற்றும் நவீன வசதிகள் கொண்ட இந்த விடுதியை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் உள்ள சிப்பெட் வளாகங்களில் 25 இடங்களில் ரூ.256 கோடியே 66 லட்சம் செல வில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை சிப்பெட் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர் களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பாலிமர் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் வீடு வீடாக இந்த பிளாஸ்டிக் பொருட் கள் சேகரிக்கப்படும். சென்னை சிப்பெட் பேராசிரியர்கள், மாணவர் கள் கிராமப்புறங்களில் சென்று, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை சேக ரிக்க வேண்டும்.

இந்த பிளாஸ்டிக்கை ஒழிப் பது தொடர்பாக, பல்வேறு மாநி லங்களும் மத்திய அரசுக்கு கடிதங் கள் எழுதியுள்ளன. இதுதொடர் பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அரசிடம் அறிக்கை சமர்ப்பித் துள்ளது. அந்த அறிக்கை பரிசீலிக் கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தற்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வகை பிளாஸ்டிக்கை ஒழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ‘மேல் பூச்சுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது, அக்டோபர் 2-ம் தேதி பிளாஸ்டிக் தடை அறிவிப்பு வருமா? ’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர், ‘‘முதலில், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக், மேல் பூச்சுள்ள பிளாஸ்டிக்கை சேகரித்து, அதை மறு சுழற்சி செய் வது. அதன்பின், அந்த பிளாஸ் டிக்குக்கு மாற்று பொருள் தயாரிப் பது என இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனெனில் தடை செய்துவிட்டால், அதை நம்பியுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, மாற்று பொருள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.

முன்னதாக, தொடக்கவிழாவில் சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிர மணியன் பேசும்போது, ‘‘தமிழக அரசு 50 மைக்ரான் வரையுள்ள பிளாஸ்டிக்குக்கு தடை விதித்துள் ளது. ஆனால், மேல் பூச்சு (coated) கொண்ட நொறுக்குத்தீனிகள் அடைக்கப்பட்டு வரும் பிளாஸ் டிக் கவர்களுக்கு தடை விதிக்கப் படவில்லை. மத்திய அரசு இதை தமிழக அரசிடம் அறிவுறுத்த வேண் டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், மத்திய ரசாயனத் துறை இணை செயலாளர் காசிநாத் ஜா, சிப்பெட் டைரக்டர் ஜெனரல் எஸ்.கே.நாயக், முதன்மை இயக்கு னர் காந்த் ஷிராலி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 1 முதல் தடை விதித்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x