அமைச்சராக இருந்தபோது மத்திய அரசு அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றவர் ஸ்டாலின்- கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு

அமைச்சராக இருந்தபோது மத்திய அரசு அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றவர் ஸ்டாலின்- கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 2007-ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மத்திய அரசிடம் அனுமதி பெறா மல் வெளிநாடு சென்றவர் என்று சென்னை மாநகர முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘முதல்வர் பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடந்துவரும் நிலை யில், கடந்தகால நிகழ்வுகளை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, 2007 நவம்பர் 1-ம் தேதி தாய் லாந்து தலைநகர் பாங்காக் சென் றார். அவர் விமானம் ஏறும்போது தான் இந்தப் பயணம் குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதிக்கே தெரியவந்தது. மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டதாக அப்போது சர்ச்சைகள் எழுந்தன என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன், கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பிறகு காங்கிரஸ், திமுக தலைவர்களை அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

ஜெயக்குமார் கருத்து

இதற்கிடையே, நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘கராத்தே தியாக ராஜன் அதிமுகவில் சேர விரும் பினால் அதுகுறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும். அதிமுகவில் சேர்க்க கூடாதவர் களின் பட்டியலில் கராத்தே தியாகராஜன் பெயர் இல்லை’’ என்றார்.

இந்நிலையில், ஸ்டாலின் குறித்து கராத்தே தியாகராஜன் விமர்சித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in