Published : 30 Aug 2019 07:35 AM
Last Updated : 30 Aug 2019 07:35 AM

இயற்கையோடு இணைந்து சதுர்த்தியை கொண்டாடுவோம்; நீர்நிலைகளை பாதுகாக்கும் ‘விதை விநாயகர்’- முன்னுதாரணமாகும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை

தன்னை தண்ணீரில் கரைக் கும் பக்தர்களுக்கும் அருள்பாலிக் கும் கணபதியைப் போற்றிப் புகழும் விநாயக சதுர்த்தி விழா நெருங்கும் நிலையில், சுற்றுச் சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் `விதை விநாயகரை' உருவாக்கி, சூழல் பாதுகாப்புக்கு முன்னுதாரண மாய்த் திகழ்கிறது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

நீர்நிலைகள் மற்றும் இயற் கைச் சூழல் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்காக செயல் பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கடந்த 134 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை களில் குளங்களைத் தூய்மைப் படுத்தல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், கரையோரம் மரக் கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கோவை வெள்ளலூர் குளம், பேரூர் பெரிய குளம், செங்குளம் உள்ளிட்டவற்றைச் சீரமைத்துள்ள இவ்வமைப்பு, இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி விழாவையொட்டி விதை விநாயகர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து கோவை குளங் கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ஆர்.மணிகண்டன் கூறியதாவது: ஆரம்பத்தில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே தண்ணீரில் கரைத்தனர். அப்போது எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

அதற்குப் பின்னர் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் செய்து, செயற்கை வர்ணங்களைப் பூசிய பிரம்மாண்டமான விநாயகர் சிலை களை வடிவமைத்து, தண்ணீரில் கரைத்ததால் ஏரி, குளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

எனவே, இதற்கு மாற்று தீர்வைக் கண்டறிய முற்பட்டோம். பாரம்பரிய மண்பாண்டக் கலை ஞர்களைக் கொண்டு, வண்டல் மண்ணால் (களிமண்) வெவ் வேறு அளவுகளில் விநாயகர் சிலைகளை தயார் செய்துள் ளோம். ஈரப்பதத்திலேயே விதை களை செலுத்தினால் முளைத்து விடும். மேலும், சிலைகள் வெடிக் கும். எனவே, சிலைகள் காய்ந்த வுடன், சிறிய ஓட்டையில் நவ தானியங்களை செலுத்துகிறோம்.

உயிரினங்களுக்கு உணவு

நெல், கோதுமை, பாசிப்பயறு, கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட வற்றை ஒரு கைப்பிடி அளவுக்கு ஒவ்வொரு சிலையிலும் போட்டு, அந்த ஓட்டையை அடைத்து, பின்னர் விற்பனை செய்கிறோம். இந்த சிலைகள் தண்ணீரில் போட்டவுடன் எளிதில் கரைந்துவிடும். அதில் உள்ள நவதானியங்கள், நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாகி விடும். ஒருவேளை கரை ஒதுங்கி செடியாக வளர்ந்தாலும், அதில் உருவாகும் புழுக்கள் உள்ளிட் டவை நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக இருக்கும். நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. மண்ணும் வளமாகும்.

நல்ல படிப்பினை

நமது கொண்டாட்டங்கள் அறிவுபூர்வமாகவும், சூழலைப் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டுமென்பதே எங்களது நோக்கம். இதேபோல, வீட்டிலேயே வண்டல் மண்ணைக் கொண்டு சிலை செய்து, தானியங்களை உள்நுழைத்து, விநாயகர் சதுர்த் தியைக் கொண்டாடலாம். எதிர் கால சந்ததிக்கும் இது நல்ல படிப்பினையாக இருக்கும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள விதை விநாயகர் சிலைகளை, குறைந்த விலையில் விற்கிறோம். 6 அங்குலம் கொண்ட சிலை ரூ.60, 9 அங்குல சிலை ரூ.90, 12 அங்குல சிலை ரூ.140, 15 அங்குல சிலை ரூ.200, 18 அங்குல சிலை ரூ.240-க்கு விற்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x