

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பாக தனியார் மற்றும் மாநகராட்சி மருத்துவர்களுக்கு காய்ச்சல் பற்றிய சிகிச்சை முறைகளை விளக்குவதற்கான பயிற்சி வகுப்பினை ஆணையர் பிரகாஷ் இன்று (29.08.2019) அம்மா மாளிகையில் உள்ள கலையரங்கத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது, டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். கொசுக்களால் பரவும் டெங்கு சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் 2,950 களப் பணியாளர்கள், 234 மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு 500 வீட்டிற்கும் ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு, கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டிகள், பூந்தொட்டிகள், டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை கண்டறியது தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொசுக்களை அழிப்பதற்காக 431 பூச்சிக்கொல்லி தெளிப்பான்கள், 236 கையில் தூக்கி செல்லக்கூடிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 39 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கான பூச்சிக்கொல்லி மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன எனவும் தெரிவித்தார்.
காய்ச்சல், நோயின் தாக்கம் ஆகியவை ஒவ்வொரு நாளும் கவனமாக மாநகராட்சி மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் குறித்த விவரங்கள் நகர சுகாதாரச் செவிலியர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருந்தும், மருத்துவ முகாம்கள் மூலமாகவும் தினசரி பெறப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலும், அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 100 படுக்கை வசதி கொண்ட 15 மருத்துவமனைகள் மூலம் இலவசமாக பொதுமக்களுக்கு சிகிக்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இம்மருத்துவமனைகளில் அனைத்து சிகிக்சைகளுக்கும் தேவையான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ உபகரணங்கள் உள்ளன.
பொதுமக்கள் எந்நேரத்திலும் இம்மருத்துவமனைகளை அணுகி தரமான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். காய்ச்சலுக்கான சரியான சிகிச்சை அளிப்பதன் மூலமும், குறித்த நேரத்தில் மேல்சிகிச்சைக்காக பரியதுரைக்கப்படுவதன் மூலமும் காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் நிலவேம்பு குடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
நிலவேம்பு குடிநீர் மாநகராட்சி மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சி அம்மா உணவங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, தனியார் மருத்துவ அலுவலர்கள் இதுபோன்ற நோய்கள் குறித்த அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டுமென ஆணையாளர் அவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலயதுகொண்ட மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், பெரியவர்கள் மற்றும் குழயதைகளுக்கு காய்ச்சல் மற்றும் டெங்குவால் ஏற்படும் தாக்கம்
மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இப்பயிற்சி வகுப்பில் கலயது கொண்ட மருத்துவர்களுக்கு விரிவாக விவரிக்கப்பட்டது.
தொடர்யது ஆணையாளர் அவர்கள் மருத்துவமனைகள், பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடிகள், காலிமனைகள், புதிய கட்டுமானத்தில் உள்ள கட்டடங்கள் போன்ற இடங்கள் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24,000 திறந்தவெளி இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்களால் குடியிருப்பு பகுதிகளிலுள்ள குடிநீர் தொட்டிகளில் கொசுக்களை அழிக்கும் அபெட் கிருமி நாசினி தெளிக்கப்படும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இவைகள் கோட்டம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் மாநகராட்சி பணியாளர்களால் ஆய்வு செய்யப்ப்பட்டு வருகிறது.
ஆய்வின் போது, வீடுகளிலோ அல்லது கட்டிடங்களிலோ கொசுபுழு கண்டறியப்பட்டால் கட்டிடத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் இதுவரை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.10 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ளவாறு வசூலிக்கப்படும் என்று ஆணையர் பிரகாஷ், தெரிவித்தார்.
அபராத தொகையை வீடுகள், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள் என தர வாரியாக பிரித்து அபராத தொகை விகிதங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் முதன் முறை கண்டறியப்பட்டால் ஒரு தொகையும், இரண்டாம் முறை கண்டறியப்பட்டால் கூடுதலாக ஒரு தொகையும், மூன்றாம் முறை கண்டறியப்பட்டால் அதைவிட கூடுதலான தொகையும் அபராதமாக விதிக்கப்படும்.
குடியிருப்புகள் தனி வீடுகள் தாக்கீது வழங்கப்படும் ரூ.150/- ரூ.500/-
அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.500/- ரூ.5000/- ரூ.15,000/-
கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் தனி வீடுகள் ரூ.500/- ரூ.2,500/- ரூ.10,000/-
வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.10,000/- ரூ.20,000/- ரூ.50,000/-
தொழில் நிறுவனங்கள் ரூ.25,000/- ரூ.50,000/- ரூ.1,00,000/-
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் 50க்கு மேல் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் ரூ.1,00,000/- ரூ.5,00,000/- ரூ.10,00,000/-
50க்கு குறைவாக படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் ரூ.25,000/- ரூ.1,00,000/- ரூ.2,00,000/-
பள்ளி மற்றும் கல்லூரிகள் 1000 மாணவ/ மாணவியர்களுக்கு மேல் உள்ள பள்ளி/ கல்லூரிகள் ரூ.25,000/- ரூ.1,00,000/- ரூ.2,00,000/-
1000 மாணவ/மாணவியர்களுக்கு குறைவாக உள்ள பள்ளி/ கல்லூரிகள் ரூ.5,000/- ரூ.25,000/- ரூ.50,000/-
தொழில் மற்றும் வணிக வளாகங்கள் சிறுகடைகள் ரூ.500/- ரூ.2,000/- ரூ.5,000/-உணவு விடுதிகள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ரூ.10,000/- ரூ.25,000/- ரூ.50,000/-
2 நட்சத்திர மற்றும் அதற்கு மேல் வசதி கொண்ட உணவகங்கள், விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் ரூ.1,00,000/- ரூ.5,00,000/- ரூ.10,00,000/-
இதர அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ரூ.10,000/- ரூ.25,000/- ரூ.50,000/-
இப்பயிற்சி வகுப்பில், துணை ஆணையாளர் (சுகாதாரம்), , பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் வடிவேலன், இந்திய மருத்துவக் கழகத்தின் பிரதிநிதிகள், மாநகர நல அலுவலர் டாக்டர் என்.ஏ.செந்தில்நாதன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா, கூடுதல் மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் ரகுநந்தன், அரசு குழந்தைகள் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் பூவழகி, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.