டி.ஜி.ரகுபதி

Published : 29 Aug 2019 09:43 am

Updated : : 29 Aug 2019 09:43 am

 

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?- கோவையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை 

nia-raid-in-kovai
படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த உமர் பாரூக் , வின்சென்ட் சாலையைச் சேர்ந்த சனோபர் அலி, வின்சென்ட் சாலை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ஷமேஷா முபின், உக்கடம் பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்த முகமது யாசிர், ஜி.எம்.நகர் பள்ளி வீதியைச் சேர்ந்த சதாம் உசேன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.

சோதனை நடத்தப்படும் இடங்களில் கோவை மாநகர போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவு நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேற்கண்ட நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட 5 பேரும் வீட்டில் உள்ளனர். அவர்களிடம் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தொடர்பாக அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது 2-வது முறையாக சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

NIA raid in kovaiகோவைஐஎஸ்என்.ஐ.ஏ
Popular Articles

You May Like

More From This Category

More From this Author