Published : 15 Jul 2015 10:39 AM
Last Updated : 15 Jul 2015 10:39 AM

மக்களவை உறுப்பினர்கள் பாணியில் கிராமத்தை தத்தெடுத்த இளைஞர்கள்

மக்களவை உறுப்பினர்களின் தத்தெடுப்பு பாணியில் பெரம்பலூர் இளைஞர்கள் கிராமம் ஒன்றைத் தத்தெடுத்து அதை மேம்படுத்தும் முன்னுதாரண திட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர் ஒன்றியம் குரும்பாபாளையம் கிராமம், இரு தினங்களுக்கு முன், திடீரென குவிந்த இளைஞர்கள் கூட்டத்தால் பரபரப்புடன் காணப் பட்டது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் இருப்ப வர்கள், கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு மட்டங்களில் இருந்து இளைஞர்கள் குரும்பாபாளையத்தில் குழுமி னர். காரணம் புரியாமல் தவித்த அந்த ஊர் மக்களிடம், “உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்துக் கொள்கிறோம். கிராமத்தின் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக எங்களுடைய விடுமுறைப் பொழுதை கிராமத்தினருடன் செலவழிக்க முடிவுசெய்துள்ளோம்” என்று கூறி கிராம மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

கூறியபடியே, ஒரே நாளில் கிராமத்து சாலையோரங்களில் மூங்கில் தடுப்புக்குள் மரக்கன்று களை நட்டதுடன், அவை ஒவ்வொன்றுக்கும் உள்ளூர் பெரியவர்களின் பெயர்களைச் சூட்டினர். அடுத்து, மானாவாரி சாகுபடியும் பொய்த்துவரும் அந்த கிராமத்தில், விவசாயம் மேம்பட கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கினார்கள்.

பின்னர், சாலையோரங்களிலும் திறந்தவெளியிலும் மனிதக் கழிவுகளை சேர்ப்பதன் தீமைகள் குறித்து வீடுவீடாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்டத்தின் முன்னோடித் திட்டமான ‘சூப்பர் 30’ பயிற்சியை பிரத்யேகமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அளிப்பதற்காக மாணவ, மாணவிகளின் விவரங்களைச் சேகரித்தனர்.

இப்படி விடுமுறை நாளான ஞாயிறு தினத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க திட்டமிட்ட பெரம்பலூர் ‘இந்தியன் உதவும் கரங்கள்’ அமைப்பின் நிறுவனர் ரா.பரமேஸ்வரி கூறியபோது, “ஏற்கெனவே இளைஞர்களை ஒருங்கிணைத்து உடல் உறுப்பு தானம், பள்ளி மாணவரிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நகரப் பகுதிகளில் நடத்தி இருக்கிறோம்.

நகரத்தைவிட இதுபோன்ற சேவைகள் அதிகம் தேவைப்படும் கிராமத்துக்கு சென்று அவற்றை அளிக்க திட்டமிட்டோம். அதன் படியே, பின்தங்கிய கிராமமான குரும்பாபாளையத்தை தேர்ந் தெடுத்திருக்கிறோம். இக்கிரா மத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றும் வரை எங்களது சேவை இங்கே தொடரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x