பாஜக கட்சி அலுவலகத்தில் பியூஸ் மானுஷ் தகராறு: இருதரப்பிலும் போலீஸில் புகார்

பாஜக கட்சி அலுவலகத்தில் பியூஸ் மானுஷ் தகராறு: இருதரப்பிலும் போலீஸில் புகார்
Updated on
1 min read

சேலம்

சேலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ், பாஜக அலுவலகத்துக்குள் சென்று தகரா றில் ஈடுபட்டது குறித்தும், அப் போது அவர் தாக்கப்பட்டது குறித் தும் போலீஸார் விசாரித்து வருகின் றனர்.

சேலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் நேற்று மாலை 5 மணி அளவில் மரவனேரி யில் உள்ள சேலம் மாநகர மாவட்ட பாஜக அலுவலகத்து சென்றார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் பொருளாதார பின்னடைவு காஷ்மீர் பிரச்சினை உள்ளிட் டவை குறித்து விளக்கம் கேட்டுள் ளார். இதை தனது பேஸ்புக் முகவரியில் வீடியோ மூலம் நேரலை செய்தார். இதனால் அவருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

இது கைகலப்பாக மாறியதில் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீஸார், பியூஸ் மானுஷை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், தன்னை பாஜக வினர் தாக்கியதாக பியூஸ் மானுஷ் புகார் செய்தார். இதுபோல பாஜக தரப்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம், பாஜக அலுவலகத்துக்குள் அத்து மீறி நுழைந்து கலாட்டா செய்து நிர்வாகிகளை தாக்கியதாக பியூஸ் மானுஷ் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in