

தஞ்சாவூர்
ரூ.1.76 லட்சம் கோடி நிதியைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய கடன்களை யும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தஞ்சாவூரில் நேற்று திமுக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் பங்கேற்ற கருத்தரங்கரங்கில் பங்கேற்று அவர் பேசியதாவது:
காவிரியில் நீர் தர கர்நாடகா மறுக்கிறது. டெல்டா மாவட்டங் கள் வறண்டுவிட்டன. குறுவை சாகு படி இல்லை. பருவமழை பொய்த்து விட்டது. மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்படவில்லை. விவசாயம் நலிவடைந்துவிட்டது. விவசாயிகள் தற்கொலை பெருகி விட்டது. விவசாயிகள் வேறு மாநிலத்துக்கு புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதை தஞ்சைக்கான பிரச் சினையாக மட்டுமல்லாமல், ஒட்டு மொத்தமான தமிழகத்தின் பிரச்சி னையாக நாம் பார்க்க வேண்டும்.
காவிரி நீர் 12 மாவட்ட விவ சாயிகளுக்கான சாகுபடிக்கான ஆதாரமாகவும், 19 மாவட்ட மக்க ளுக்கான குடிநீர் தேவையாகவும் உள்ளது. இதுபோன்ற கருத் தரங்கை தஞ்சாவூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண் டும்.
இயற்கையின் சதியால் மட்டு மல்ல, அரசியல் சதியாலும் காவிரி வறண்டுவிட்டது. தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரைத் தர கர்நாடக அரசு மறுக்கிறது. காவிரி யில் தண்ணீரை கேட்பது தமிழகத் தின் உரிமை. அதை கர்நாடகா தர வேண்டியது கடமை. ஆனால், கர்நாடக அரசு அந்த கடமையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தமிழகத் துக்கு கொண்டுவந்து விவசாய நிலங்களை நாசப்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. மக்களையும், மண்ணையும் பாதிக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் திமுக எதிர்க்கும். திமுக, வளர்ச்சிக் கான எதிரி அல்ல. இந்தியா வளர வேண்டும். ஆனால், மக்களைச் சிதைத்து வளர வேண்டுமா என்பதுதான் கேள்வி.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் மட்டுமே, இப்பகுதியை பாதுகாக்க முடியும்.
ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசு பெறும் உபரி நிதியான ரூ.1.76 லட்சம் கோடியைக் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். எம்பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராம லிங்கம், எம்.செல்வராசு, திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடக்க உரையாற்றினார்.